மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது.
மொச்சையின் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடபடுகிறது. தானியங்களில் பல வகைகள் இருப்பினும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நன்மையைத் தருகிறது.
அவ்வகையில், நாம் இப்போது பார்க்கப் போகும் தானியம் மொச்சைக் கொட்டை. மொச்சைக் கொட்டையிலும் நமது உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துக்களும் உள்ளது.
மொச்சையில் டானின், டிரைப்சின் போன்ற வேதிபொருட்கள் இருப்பதால் சமைப்பதற்கு முன் ஊற வைத்து, மேற்கண்ட வேதிப்பொருட்களை நீக்க வேண்டும். அவித்தே உண்ண வேண்டும்.
இதய ஆரோக்கியம் காக்கும்
மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் மற்றும் சபோனின் போன்றவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவிடாமல் நார்ச்சத்து உதவுகிறது.
இதய தமனிகளின் சுவர்கள் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்க போலேட் உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.
செல்களை புதுப்பிக்கும்
மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல் பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம்.
புரதம் என்பது உடலில் உள்ள அணுக்கள் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் சேதம் ஏற்பட்டால் பழுது பார்க்கவும் தேவையான சத்தாகும்.
மலச்சிக்கலைத் தடுக்கும்
மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கலுக்கான வாய்ப்பு குறைக்கிறது.
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப் படுபவர்கள் மொச்சைக் கொட்டையை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்
மொச்சைக் கொட்டையில் உள்ள நார்சத்து, குடலில் நச்சுப் போருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம் பெருங்குடல் அழற்சியைத் தடுக்கிறது.
பெருங்குடல் பகுதியில் புற்று நோய் உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுக்கிறது.
மொச்சைக் கொட்டை ஒரு சிறிய அளவு ஜெனிச்டின் மற்றும் டைட்சின் என்னும் ஐஸோஃ ப்ளவன்களைக் கொண்டுள்ளது. இது மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்
மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும்.
100 கிராம் மொச்சையில் 36 கி நார்ச்சத்து உள்ளது. இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கும்.
யாரெல்லாம் உண்ணக் கூடாது
மொச்சைக் கொட்டையை மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், சக்கரை நோய் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் உண்ணக் கூடாது.
அதேபோல சிறுநீகரத்தில் கல் இருப்பவர்கள், வாதம் மற்றும் ஊரல் வியாதி உள்ளவர்கள், தோல் தொடர்பான வேறு நோய் உள்ளவர்கள் மொச்சைக் கொட்டையை உணவில் பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது.