சுவையான பச்சை பயறு தோசை செய்வது எப்படி?





சுவையான பச்சை பயறு தோசை செய்வது எப்படி?

0
பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
சுவையான பச்சை பயறு தோசை செய்வது எப்படி?
அதிலும் பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப்பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். 
பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு காரணம் பச்சை பயறு நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருப்பது தான். 

எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை இப்படி ருசியாக செய்து கொடுக்கும் போது நிச்சயமாக அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் : .

பச்சை பச்சை பயறு - ஒரு கப்

அரிசி -2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 3 கப்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 2

பொட்டுக் கடலை - 1 ஸ்பூன்

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு
செய்முறை : .
சுவையான பச்சை பயறு தோசை செய்வது எப்படி?
முதலில் பாசிப்பயறை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதனுடன் அரிசி இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

குறைந்தது 8 மணி நேரம் இந்த பச்சை பயிறு தண்ணீரில் ஊறி இருக்க வேண்டும். 

எனவே முந்தைய நாள் இரவே நீங்கள் ஊற வைத்து விட்டால் மறுநாள் காலையில் அரைத்து சூப்பரான மொறுமொறு பச்சை பயறு தோசை சுட்டு சாப்பிடலாம்.
மறுநாள் காலையில் அந்த தண்ணீரில் இருந்து அரிசியுடன் கூடிய பச்சைப் பயறை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

பின்னர் அதனுடன் இஞ்சி, 2 பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, சீரகம், மல்லி தழை, சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மாவிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மெல்லியதாக தோசை வார்த்தால் மொறு மொறுவென பச்சை பயறு தோசை மணக்க மணக்க ரெடியாகி விடும்..

குறிப்பு : .

நீங்கள் எடுக்கும் அரிசி இட்லி அரிசி, புழுங்கல் அரிசி, பச்சரிசி, ரேஷன் அரிசி என்று எந்த அரிசியை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)