ருசியான நூடுல்ஸ் சாட் செய்வது எப்படி?





ருசியான நூடுல்ஸ் சாட் செய்வது எப்படி?

0
நூடுல்ஸ் விலை மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கிறது அதுமட்டும் இல்லாமல் 2 நிமிடத்தில் செய்யலாம். இந்த உடனடி நூடுல்ஸ் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதால், அவை மிகவும் பதப்படுத்தப் பட்டவை ஆகும். 
ருசியான நூடுல்ஸ் சாட் செய்வது எப்படி?
நூடுல்ஸ் குறைவான  ஊட்டச்சத்து உள்ளடக்கி  உள்ளது. கொழுப்பு, கலோரி மற்றும் சோடியம் அதிகமாகவும் மற்றும் செயற்கை நிறங்கள், செயற்கை சுவையூட்டல் அதிகமாக பயன் படுத்தி உள்ளனர். 
நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் நூடுல்ஸ் உணவுக்கு உண்டு. ஆனால் இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், சில பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.

இந்த நூடுல்ஸில் இருக்கும் கொழுப்பு, நீங்கள் தூங்கும் போது உங்கள் உடலின் எடையை எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம். இது தவிர இதில் உள்ள கார்போ ஹைட்ரேட்கள் இருப்ப‍தால் அஜீரண கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.  

நூடுல்ஸ் சாட் இந்தியா முழுவதும் பிடித்த தெரு உணவு சிற்றுண்டியாக மாறியுள்ளது. சில தெரு உணவு விற்பனையாளர்கள் இதை நூடுல் பேல், சீன பெல் அல்லது சவ் சௌ சாட் என்று அழைக்கின்றனர்.

சிக்கன், மொறுமொறுப்பான நூடுல்ஸ் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றின் கலவை இந்த உணவில் அருமையாக இருக்கும்.

சரி இனி நூடுல்ஸ் பயன்படுத்தி ருசியான நூடுல்ஸ் சாட் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் தெரிந்து கொள்வோம்.
தேவையானவை : .
 
நூடுல்ஸ் – ஒரு கப், 

உருளைக்கிழங்கு – 2,
 
சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், 

ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி – தலா ஒரு டீஸ்பூன்,
 
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – கால் கப்,
 
கேரட் துருவல் – சிறிதளவு, 

கொத்தமல்லி – சிறிதளவு,
 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள் ! 

செய்முறை : .
ருசியான நூடுல்ஸ் சாட் செய்வது எப்படி? 
நூடுல்ஸை எண்ணெயில் பொரிக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, துண்டுகளாக்கவும். 

ஒரு தட்டில் உருளைக்கிழங்கு துண்டுகளை பரப்பி… அதன் மீது நூடுல்ஸ், சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, ஓமப்பொடி, கேரட் துருவல், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

ருசியான நூடுல்ஸ் சாட் ரெடி.!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)