சுவையான தப்பாளம் குழம்பு செய்வது எப்படி?





சுவையான தப்பாளம் குழம்பு செய்வது எப்படி?

0
வாழைக்காயில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் பி6 மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. இது மட்டுமில்லாமல் அதிகளவில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
சுவையான தப்பாளம் குழம்பு செய்வது எப்படி?

இதிலுள்ள பொட்டாசியம் உங்களது சிறுநீரகத்துக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. அத்தோடு ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
வாழைக்காயை வேக வைத்து ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் செரிமான அமைப்பு சீராகிறது.

இதில் குறைந்த டயட் அளவுகள் கொண்ட நார்ச்சத்தி நிரம்பியிருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்குகிறது. இதனால் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிக்க செய்யாமல் பார்த்துக் கொள்கிறது.

இன்னும் கிராமப் புறங்களில் மிக நேர்த்தியான முறைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய மிகச்சிறந்த உணவுகளை சமைத்து உண்டு வருவதால் தான் அவர்கள் வேலைகளையும் கடுமையாக செய்ய முடிகிறது.

நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள். இந்த குழம்பை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு பாராட்டு நிச்சயம்.

அப்படிப்பட்ட கிராமப் புறத்தில் சமைக்கக் கூடிய மிக முக்கியமான சுவை மிகுந்த தப்பாளம் குழம்பு பற்றி பார்க்கலாம்.

உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இந்த குழம்பை செய்து கொடுத்து அசத்த என்னென்ன தேவை என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : . 
 
வாழைக்காய் - 1
 
கத்தரிக்காய் - 6
 
முருங்கைக்காய் - 2
 
கீரைத்தண்டு - 1
 
மொச்சைக் கொட்டை -  அரை கப் 

மாங்காய் - ஒன்று
 
தேங்காய் - அரை மூடி
 
கூட்டு தூள்  - 4 தேக்கரண்டி
 
புளி - தேவைக்கேற்ப
 
பூண்டு - தேவைக்கேற்ப
 
வரமிளகாய் - தேவைக்கேற்ப
 
பெரிய வெங்காயம் - தேவைக்கேற்ப
 
தக்காளி - தேவைக்கேற்ப
செய்முறை : . 
சுவையான தப்பாளம் குழம்பு செய்வது எப்படி?
முதலில் மேற்கூறிய காய்களை துண்டு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மொச்சை கொட்டையை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

தேங்காயை பல் பல்லாக சிறிதாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மேற்கூறிய காய்களை உப்பு சேர்த்து வேக வைக்கவ தண்ணீரை ஊற்ற வேண்டும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, தக்காளி, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றவும்.
 
அத்துடன் தேங்காய், மாங்காய் அரைத்துப் போடலாம் நன்றாக கொதி வந்ததும் இறக்கி விடவும். தப்பாளம் குழம்பு ரெடி. சாதத்தோடு ஒரு பிடி பிடிக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)