காட்டேஜ் சீஸ் லசான்யா ரோல் செய்வது எப்படி?





காட்டேஜ் சீஸ் லசான்யா ரோல் செய்வது எப்படி?

0

கால்சியம், கொழுப்பு மற்றும் புரோட்டினின் சிறந்த மூலமாக சீஸ் இருக்கிறது. தவிர சீஸில் ஜிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ரிபோஃப்ளே உள்ளிட்டவற்றுடன் வைட்டமின்ஸ் ஏ மற்றும் பி-12 காணப்படுகிறது. 

காட்டேஜ் சீஸ் லசான்யா ரோல் செய்வது எப்படி?

சீஸை அதிகம் சாப்பிடாத வரை எலும்புகளை வலிமையாக்குவது முதல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது வரை நமக்கு பல நன்மைகளை அளிக்கும். 

கால்சியம், கொழுப்பு மற்றும் புரோட்டினின் சிறந்த மூலமாக சீஸ் இருக்கிறது. தவிர சீஸில் ஜிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ரிபோஃப்ளே உள்ளிட்ட வற்றுடன் அதிக அளவு வைட்டமின்ஸ் ஏ மற்றும் பி-12 காணப்படுகிறது. 

எனவே சீஸ் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், மன அழுத்தத்தி லிருந்து நிவாரணம் தருகிறது. மேலும் சீஸில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே2 உள்ளிட்டவையும் அடங்கி இருக்கிறது.

சீஸ் நிறைந்த இந்த லசானியா, காய்கறிகளால் நிரப்பி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு நிச்சயம் அவர்கள் நோ சொல்ல மாட்டார்கள்.  

சரி இனி சீஸ் கொண்டு சுவையான காட்டேஜ் சீஸ் லசான்யா ரோல் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம். 

தேவையான பொருட்கள் : .

லசான்யா பாஸ்தா ரோல்ஸ் - 9   

மஞ்சள் குடைமிளகாய் - 1

சிவப்பு குடைமிளகாய் - 1

பசலைக் கீரை - சிறிதளவு

மோஸெரெல்லா சீஸ் - 120 கிராம்

பார்மீசான் சீஸ் - 40 கிராம்

காட்டேஜ் சீஸ் - 240 கிராம்

உப்பு - 5 கிராம்   

வெங்காயம் - 100 கிராம்

தாக்காளி கான்சாஸ் - 400 கிராம்

முட்டை - 1

ஆண்களே உங்கள் மச்சபலன் பற்றி அறிய ஆவலா? 

செய்முறை : .

காட்டேஜ் சீஸ் லசான்யா ரோல் செய்வது எப்படி?

பாத்திரத்தில், கீரை, மோஸெரெல்லா, காட்டேஜ் சீஸ், லு கப் பார்மீசான் சீஸ் மற்றும் முட்டை ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். 

அதை ஒரு கப்பில் 1/3 பகுதியளவு எடுத்துக் கொண்டு, லசான்யா ஷீட்டில் வைக்கவும். உருட்டி, பற்குத்தும் குச்சியை குத்தி இறுக்க மாக்கவும்.

இப்படி பிணைக்கப்பட்ட பகுதிகள் கீழே இருக்குமாறு ஒரு பேக்கிங் டிரேவில் குக்கிங் ஸ்ப்ரேவைத் தெளித்து வைக்கவும். அதை மூடி ஒரு இரவு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

குண்டா இருந்தால் ஒல்லியாக காட்ட இதோ சில டிப்ஸ் !

பேக் செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக ஃப்ரிட்ஜிலிருந்து எடுக்கவும். ரோல்களின் மேலே தக்காளி சாஸை தாராளமாக ஊற்றவும்.

இதை மூடி 350கு இல் 33- & 38 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். மீதமுள்ள பார்மீசான் சீஸை மேலே தூவி, குச்சிகளை அகற்றி விட்டு பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)