நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்து கிறார்கள்.
உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கி விடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள்.
உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.
அதிகபட்ச நன்மைக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். நீங்கள் தினமும் காலையில் 1-2 நெல்லிக்காய்களை சாப்பிடலாம்.
வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால் ஒரு நாளைக்கு 2-க்கு மேல் சாப்பிட வேண்டாம்.
சரி இனி வெள்ளரிக்காய் கொண்டு சுவையான நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : .
நெல்லிக்காய் - 10
கொத்த மல்லித் தழை - 1 கப்
கறிவேப்பிலை - ¼ கப்
பச்சை மிளகாய் - 7
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - சிறு துண்டு
கடுகு - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை : .
நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.
மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும். பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்த மல்லித் தழை சேர்த்து கலக்கவும். கலவை ஆறியதும் பசை போல அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
இதை, தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறவும். இப்போது 'நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி' தயார்.