அசைவம் சமைப்பது மிகவும் சுலபம். ஒரு குழம்பு, ஒரு வறுவல் அல்லது கிரேவி என அன்றைய சமையல் வேலைகளை சுலபமாக முடித்து விடலாம்.
ஆனால் இறுதியாக நாம் செய்வது என்னவோ பட்டியலில் இல்லாத ஒரு புது உணவை தான். தினமும் என்ன குழம்பு வைப்பது என்று புரியாமல் குழம்பி தவிக்கிறீர்களா? எப்போதும் வைக்கும் குழம்பு எல்லாம் போர் அடிக்குதா?
இன்று கொஞ்சம் வித்தியாசமாக நெல்லிக்காய் மோர் குழம்பு ரெசிபியை பார்க்கலாம். நெல்லிக்காயை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இந்த குழம்பை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வேக வைத்த நெல்லிக்காய் - 3
துருவிய தேங்காய் - 1/4 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2-3
புளிக்காத கெட்டி தயிர் - 3/4 கப்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு : .
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - ¼ டீஸ்பூன்
வெந்தயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை -10
டாய்லெட் பேப்பர் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதானாம் !
செய்முறை : .
காச நோய் மலட்டுத் தன்மையை உண்டாக்குமா? எப்படி தடுப்பது?
இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் ஊற வைத்த அரிசி பருப்பு, துருவிய தேங்காய், இஞ்சி, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் உப்பு, மஞ்சள் பொடி மற்றும் தயிர் சேர்த்து அரைக்கவும். இவை எல்லாம் நன்கு அரைப் பட்டவுடன், வேக வைத்து நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளும்.
அரைத்த தேங்காய் விழுதை ஒரு கடாயில் மாற்றி மிக்ஸி கழுவிய நீரையும் ஊற்றி சூடாக்கவும். இது லேசாக கொதி வர தொடங்கியவுடன் அடுப்பை அணைக்கவும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் தயிர் திரிந்து விடும்.
அடுத்ததாக தாளிப்பதற்கு ஒரு கடாய் அல்லது தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
நீங்கள் விரும்பினால் தாளிப்பதற்கு சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி குழம்பில் சேர்க்கலாம்.
பெண்களின் உயிரை வாங்கிய அந்த கால கருத்தடை சிகிச்சை !
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயை கொண்டு தயாரிக்கப்படும் இந்த அற்புதமான நெல்லிக்காய் மோர் குழம்பு ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.