கொள்ளு பானம் புத்துணர்ச்சி தந்து நோய்களையும் விரட்டும் !





கொள்ளு பானம் புத்துணர்ச்சி தந்து நோய்களையும் விரட்டும் !

0

கோடை காலத்தில் உடலில் சரியான நீரேற்றம் இருக்க வேண்டும். அப்படி இல்லாததால் தலைமுடி வறண்டு போகும். இப்படி வறட்சியான வறண்ட ஸ்கால்ப் காரணமாக, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் வரும்.

கொள்ளு பானம் புத்துணர்ச்சி தந்து நோய்களையும் விரட்டும் !
இதனால் வெயில் காலத்தில் சில உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கோடையில் உங்கள் வயிற்றைக் குளிர்விக்கவும், முடி பிரச்சனைகளையும் குறைக்கவும், சருமத்தை பொலிவுற செய்யவும் குடிக்க வேண்டிய பானத்தை குறித்து நிபுணர் ருஜுதா திவேகர் நமக்கு சொல்கிறார். 

கொள்ளு பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பானம் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். 

அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். 

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். இந்த கோடைகால பானத்தை குடிப்பதால் முடிக்கு ஊட்டமளிக்கும். 

அதன் வளர்ச்சியையும் தூண்டும். இது உங்கள் தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து, உள்ளிருந்து முடியை நீரேற்றமாக வைக்கிறது. இதன் காரணமாக, முடி ஆரோக்கியமாக மாறும். 

குடல் புழுக்கள் என்றால் என்ன?

கொள்ளு உண்பது சருமத்திற்கு நன்மை பயக்கும். இது உங்கள் தோலில் உள்ள நிறமியைக் குறைத்து, உள்ளிருந்து நிறத்தை மேம்படுத்த உதவும். 

முகத்தில் கரும்புள்ளிகள், அழுக்கு போன்றவை நீங்க கொள்ளு பானம் உதவும். வாரம் 3 முறை குடித்தால் முகம் பொலிவு பெறும். 

கொள்ளு பானம் புத்துணர்ச்சி தந்து நோய்களையும் விரட்டும் !

கொள்ளு வைத்து தயாரிக்கப்படும் இந்த பானம் மனநிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. 

இது ஹார்மோன் கோளாறுகளை சரி செய்வதோடு உங்கள் மனநிலையை மேம்படுத்தும். இதனால் நீங்கள் நன்றாக உணர முடியும். இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. 

கொள்ளு உடல் எடையை குறைப்பதில் நல்ல பலனை தரும். வாரத்தில் 2 அல்லது 3 முறை கொள்ளு பானம் அருந்துவது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும். 

குளிர் காலத்தில் சளித் தொந்தரவு - தவிர்க்க வேண்டிய உணவு

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது.

இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை ரசமாக வைத்து உண்பது மிகுந்த நன்மை என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)