ரமலான் ஸ்பெஷல் ஜாலர் ரோல்ஸ் செய்வது எப்படி?





ரமலான் ஸ்பெஷல் ஜாலர் ரோல்ஸ் செய்வது எப்படி?

பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கி யுள்ளது. இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். 

ரமலான் ஸ்பெஷல் ஜாலர் ரோல்ஸ் செய்வது எப்படி?
எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள். பிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதற்கு முக்கிய கரணம்  தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது. எனவே தந்தூரி மற்றும் கிரில் சிக்கனை  அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள். 

தற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். 

சரி இனி சிக்கன் கொண்டு சுவையான ரமலான் ஸ்பெஷல் ஜாலர் ரோல்ஸ் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.

தேவையானவை : .

முட்டை - 2

தண்ணீர் - 650 மில்லி

கெட்டி தேங்காய்ப்பால் - 100 மில்லி

மைதா மாவு - 350 கிராம்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் - 100 மில்லி

பூரணம் செய்ய:

எலும்பில்லாத கோழி இறைச்சி - கால் கிலோ (குச்சி போல நீளவாக்கில் நறுக்கவும்)

வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)

கேரட் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)

பீன்ஸ் - 5 (நீளவாக்கில் நறுக்கவும்)

நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்

குடமிளகாய் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)

மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்

நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கார்ன் முட்டை சூப் செய்வது எப்படி?

செய்முறை : .

ரமலான் ஸ்பெஷல் ஜாலர் ரோல்ஸ் செய்வது எப்படி?

பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி அதில், தண்ணீர், தேங்காய்ப் பால், மைதா மாவு, உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் நீர்க்க கரைக்கவும். இந்த மாவை பைப்பிங் பேக்கில் ஊற்றவும். 

தோசைக் கல்லை சூடாக்கி மாவை வலை போன்று கல்லில் சுற்றி ஊற்றவும். எண்ணெய் சிறிதளவு ஊற்றி தோசை போல் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். இதுவே ஜாலர் ரோல்ஸ் தோசை.

குக்கரில் கோழியுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி காய்கறிகள் சேர்த்து, முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகும் வரை வதக்கவும். இதனுடன் வெந்த சிக்கன் சேர்த்து, கொத்த மல்லித்தழை தூவி நன்கு வேக விடவும். 

ஹாட் சாக்லேட் கொக்கோ டிரிங் செய்வது எப்படி?

இதுவே பூரணம். ஒரு ஜாலர் தோசையின் மேல் ஓரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் பூரணத்தை வைத்து தோசையின் இரண்டு ஓரங்களையும் உட்புறமாக மடிக்கவும். 

பிறகு, பூரணம் உள்ள பக்கத்தை அதன் எதிர் புறமாக பாய் போல சுருட்டி இறுக்கமான ரோல் போன்று செய்யவும். சாஸுடன் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Tags: