பருத்தி விதையில் நார்ச்சத்துக்கள் மிக மிக அதிகம். இந்த பருத்தி பாலை காலையில் டீ, காபிக்கு பதிலாக எடுத்துக் கொண்டு வரலாம்.
பருத்திப் பால் அடிக்கடி சாப்பிடுவதால் நமக்குப் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு மட்டுமின்றி மலச்சிக்கல் பிரச்சினை வராமல் தடுக்கவும் அஜீரணக் கோளாறை சரிசெய்யவும் உதவி செய்யும்.
பருத்திப் பால் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். கெட்ட கொலஸ்டிராலை ரத்தத்தில் இருந்து கரைத்து வெளியேற்றி நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்யும்.
இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. நெஞ்சு சளியை விரட்டும். ஆகவே மழை, குளிர் காலங்களில் அடிக்கடி பருகலாம். மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
சரி பலம் தரும் பருத்திப்பால் ரெசிபி செய்வது பற்றி பார்க்கலாம்.
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் !
பச்சரிசி – 100 கிராம்
கருப்பு பருத்தி விதை – 50 கிராம்
தேங்காய் மூடி – 1
ஏலக்காய் – 3
முந்திரி – சிறிதளவு
சுக்கு – சிறிதளவு
கருப்பட்டி – 1 வட்டு (பெரியது)
நரம்பு முடிச்சு நோய் வர காரணம் !
செய்முறை : .
கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் பாலும் எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிது நேரம் வேகவிட வேண்டும்.
தசைப்பிடிப்பு தடுப்பது எப்படி?
அரிசி வெந்தவுடன், குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து, பருத்திப் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்த்து அதனுடன் சுக்கு, ஏலக்காய், மீதமுள்ள தேங்காய் துருவல், வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.
தேங்காய் பாலை இறுதியாக சேர்க்கத்துக் கொள்ளலாம். அதன் பிறகு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பருத்தி பால் தயார்.