சர்க்கரை வியாதி உள்ளவங்க வெல்லம் சாப்பிடலாமா?





சர்க்கரை வியாதி உள்ளவங்க வெல்லம் சாப்பிடலாமா?

0

வெல்லம் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களுடன் நிரம்பிய அனைவருக்கும் விருப்பமான ஒன்று. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க கூடிய சிறந்த ஆற்றல் மூலமாகும்.

சர்க்கரை வியாதி உள்ளவங்க வெல்லம் சாப்பிடலாமா?
ஆயுர்வேதத்தில் பதட்டம், ஒற்றைத் தலைவலி, செரிமானம் மற்றும் சொர்வு உள்ளிட்ட பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பல ஆண்டுகளாக வெல்லம் பயன்படுத்தப் படுகிறது. 

அதே நேரம் எல்லா பொருளும் போன்று வெல்லத்துக்கும் தீமைகள் அளிக்கும் பக்க விளைவுகளும் உண்டு. 

அது தரம் மற்றும் எடுத்து கொள்ளும் அளவு பொறுத்தது. வெல்லம் உண்டாக்கும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

வெல்லம் 100 கிராம் அளவில் 385 கலோரிகள் இருப்பதால், டயட்டில் இருப்பவர்களுக்கு வெல்லம் நிச்சய உணவாக இருக்காது. சிறிதளவு விகிதம் எடுத்து கொள்வது உண்மையில் பிரச்சனை இல்லை. 

அதிகமாக எடுத்து கொண்டால் அதிக எடை உண்டாக வழிவகுக்கும். வெல்லம் சர்க்கரை மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் நிறைந்தது.

எடை இழப்பு திட்டத்தில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் இருந்தாலும் அதிகப்படியாக எடுக்க விரும்பினால் இது நிச்சயம் உதவாது. 

சர்க்கரை வியாதி உள்ளவங்க வெல்லம் சாப்பிடலாமா?

வெல்லம் நல்ல ஊட்டச் சத்துக்களை கொண்டிருந்தாலும் குறைந்த கலோரிகளுடன் உள்ள ஊட்டச் சத்துக்கள் மீது நீங்கள் கவனம் திரும்பலாம்.

நீரிழிவு நோயை கொண்டிருப்ப வர்களுக்கு சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் சேர்க்க அறிவுறுத்தப் படுகிறது.

( நீரிழிவு கட்டுக்குள் வைத்து மிதமான இனிப்பு எடுக்கும் போது ) இயல்பாகவே இனிப்புக்கு சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பரிந்துரைக்கப் படுகிறது.

ஆனால் நீரிழிவு இருக்கும் போது வெல்லம் தொடர்ந்து சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். 10 கிராம் வெல்லத்தில் 9.7 கிராம் சர்க்கரை அளவு உள்ளது. 

அதனால் நீரிழிவு கட்டுக்குள் இருந்தாலும் கவனமாக வெல்லம் சேர்க்க வேண்டும். வெல்லத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அதை சுத்தம் செய்வது அவசியம். 

ஏனெனில் வெல்லம் அசுத்தமான சூழலில் தயாரிக்கப்படும் போது, நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்களை கொண்டிருக்கலாம்.

ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. வெல்லம் சரியாக தயாரிக்கபடாத போது அது குடல் ஒட்டுண்ணிகள் மற்றும் புழுக்கள் பெறும் அபாயத்தை அதிகரிக்கும். 

சர்க்கரை வியாதி உள்ளவங்க வெல்லம் சாப்பிடலாமா?

பல நேரங்களில் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். இது ஆரோக்கியத்தை பாதிக்கலாம். வெல்லம் புதிதாக தயாரிக்கப்படும் போது அதை எடுத்து கொண்டால் வயிற்றுப் போக்குக்கு வழிவகுக்கும். 

சிலர் புதிதாக தயாரிக்கும் வெல்லத்தை பயன்படுத்துவதால் அது மலச்சிக்கலை உண்டாக்கவும் செய்யலாம். எப்போதும் வெல்லத்தை பழையதாக்கி எடுக்க வேண்டும்.

கோடைக் காலத்தில் மூக்கில் இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதை எதிர் கொள்வார்கள். 

கோடை காலத்தில் அதிகளவு வெல்லம் எடுத்துவந்தால் மூக்கில் இரத்தம் வரும் பிரச்சனையை தீவிரமாக்கலாம். வெல்லம் சில உடல்நல பிரச்சனைகளை அதிகரிக்கலாம். 

வெல்லம் சுத்திகரிக்கப் படாமல் இருக்கலாம். அதிக சுக்ரோஸ் கொண்டிருக்கலாம். அதிலும் முடக்கு வாதம் போன்ற அழற்சி நிலைகள் இருந்தால் அதை உட்கொள்வது கூடாது. 

குறைவாகத் தான் என்றும் எடுக்க கூடாது. சுக்ரோஸ் அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் தலையிடக் கூடும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது வீக்கத்தை அதிகரிக்கும். 

சர்க்கரை வியாதி உள்ளவங்க வெல்லம் சாப்பிடலாமா?

இது சிரங்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற அலர்ஜியை உண்டாக்கலாம். பொதுவாக விருந்துணவுக்கு பிறகு சிறுதுண்டு வெல்லம் வாயில் போட்டால் அது செரிமானத்துக்கு உதவும் என்று சொல்வார்கள். 

ஆனால் அசைவ உணவில் குறிப்பாக மீன் எடுக்கும் போது வெல்லம் சேர்க்க கூடாது. ஆயுர்வேதத்தின் படி மீன் மற்றும் வெல்லத்தை இரண்டும் சேர்த்து ஒன்றாக எடுக்க கூடாது. 

இது தீவிரமான பக்க விளைவுகளை உண்டாக்கும்.அதே போன்று அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப் பட்டவர்கள் வெல்லம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)