சுவையான வேர்க்கடலை எள் பர்பி செய்வது எப்படி?





சுவையான வேர்க்கடலை எள் பர்பி செய்வது எப்படி?

0
வேர்க்கடலை எச்.டி.எல் அதிகரிக்கும் போது எல்.டி.எல்.ஐ குறைக்க உதவுகிறது. இது ஒரு நல்ல வகை கொழுப்பு வகையை சேர்ந்தது. 
சுவையான வேர்க்கடலை எள் பர்பி செய்வது எப்படி?
வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவது, பித்த அமிலங்களின் உற்பத்தியில் குறுக்கீடு செய்வதன் காரணமாக பித்தப்பை கற்களை தடுக்க உதவும். 

வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவை யில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள்  தள்ளி விட்டு விடும். 
தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறி விடும். வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதை விட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். 

ஆனால் வேர்க்கடலையை எண்ணெய்யில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன. 

சரி இனி வேர்க்கடலை கொண்டு சுவையான வேர்க்கடலை எள் பர்பி செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம். 
தேவையான பொருட்கள் : . 

வறுத்த வேர்க்கடலை - 1 கப் 

எள் - அரை கப் 

உலர்ந்த தேங்காய் பொடி - 4 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 

பால் பவுடர் - 6 டேபிள் ஸ்பூன் 

நெய் - 4 டேபிள் ஸ்பூன் 

சர்க்கரை - முக்கால் கப் 

தண்ணீர் - 1 கப் 
செய்முறை : .
சுவையான வேர்க்கடலை எள் பர்பி செய்வது எப்படி?
எள்ளை வெறும் கடாயில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் வறுத்தெடுத்து கொள்ளவும். ஆறிய பின் இதனை கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும். அடுத்ததாக வறுத்த வேர்க்கடலையும் பொடியாக்கி கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பொடித்த வேர்க்கடலை மற்றும் எள்ளுடன் உலர்ந்த தேங்காய் பொடி சேர்க்கவும். இவை மூன்றையும் ஒன்று சேர நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். 

பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி லேசாக சூடானவுடன் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை சேர்த்து கிளறவும். 

நெய் எல்லாம் உறிஞ்சி கலவை நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து, பால் பவுடர் மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். 
நுரையீரல் பாதிப்புகளும், தடுக்கும் முறைகளும் அறிந்து கொள்ள !
மற்றொரு கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கலவை சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும். 
இவை எல்லாம் ஒன்று சேர்ந்து நன்கு திரண்டு வரும்போது, இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். 

ஒரு மணி நேரத்திற்கு பிறகு பர்ஃபியை துண்டுகள் போட்டு பரிமாறலாம். குறிப்பு: உலர்ந்த தேங்காய் பொடிக்கு பதிலாக தேங்காய் துருவலை ஈரம் போகும் வரை வறுத்தும் பயன்படுத்தலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)