சுவையான தோசை குருமா செய்வது எப்படி?





சுவையான தோசை குருமா செய்வது எப்படி?

0
இன்று உங்கள் வீட்டில் தோசை செய்யப் போகிறீர்களா? தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து அலுத்து விட்டதா? அப்படியானால் இன்று தோசைக்கு குருமா செய்யுங்கள். 
சுவையான தோசை குருமா செய்வது எப்படி?
இந்த தோசை குருமா செய்வது மிகவும் ஈஸி. இந்த தோசை குருமா தோசைக்கு மட்டுமின்றி, இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். 

மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு தோசை குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 

கீழே தோசை குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் : . 
 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
 
இஞ்சி - 1 இன்ச்
 
பூண்டு - 2 பல்
 
பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
 
தக்காளி - 1 (நறுக்கியது)
 
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
 
வரமிளகாய் - 3
 
மல்லி - 1 டீஸ்பூன்
 
கசகசா - 1 டீஸ்பூன்
 
சோம்பு - 1 டீஸ்பூன்
 
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
 
தண்ணீர் - 1/2 கப்
 
குருமாவிற்கு...
 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 
பட்டை - 1/2 இன்ச்
 
ஏலக்காய் - 3
 
கறிவேப்பிலை - சிறிது
 
பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
 
மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
 
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 
உப்பு - சுவைக்கேற்ப
 
தண்ணீர் - 3 கப்
 
கொத்தமல்லி - சிறிது
மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்தவருக்கு கிடைத்த தெரியுமா?
செய்முறை : .
சுவையான தோசை குருமா செய்வது எப்படி?
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
 
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, அதைத் தொடர்ந்து துருவிய தேங்காய், 3 வரமிளகாய், மல்லி விதைகள், கசகசா, சோம்பு 

மற்றும் பொட்டுக் கடலை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு 1/2 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
 
பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, மஞ்ச தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
 
பிறகு அதில் 3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, மேலே கொத்த மல்லியை தூவி கிளறினால், தோசை குருமா தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)