பொதுவாக, நமது அன்றாட வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்க வழக்கங்களிலும் பலர் மிகவும் கவனக்குறைவாக இருக்கின்றனர். இதனால் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது.
இதன் காரணமாக நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், மாரடைப்பு, இதயக் கோளாறு, கரோனரி தமனி நோய், மும்முனை நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான்.
அப்படி அதிகம் கொலஸ்ட்ரோலால் பாதிக்கப் படுபவர்களுக்கு காலை சாப்பிட ஏற்ற உணவு தான் இந்த கொள்ளு மசால் தோசை.
அரிசி - 1 கப்
கொள்ளு பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
வேக வைத்த உருளைக்கிழங்கு -2
வெங்காயம் - 1
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவுகொத்தமல்லி - தேவையான அளவு
உங்களைப் பற்றி உங்கள் உதடுகள் என்ன சொல்கிறது?
செய்முறை : .
அரிசி, கொள்ளு, வெந்தயம் ஆகியவை ஊறியதும் கெட்டியான மாவு போல அரைக்கவும். அரைத்து எடுத்துக் கொண்ட பின்னர் 8-10 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.
சிசேரியன் தழும்பு இயற்கையா மறைய !
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும்.
எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்த பின்னர் உப்பு சேர்த்து எல்லாப் பொருட்களையும் நன்றாக கலக்கி மிதமான தீயில் கிளறி கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி விட்டு இறக்கிக் கொள்ளவும்.