ஒரு பயனுள்ள துப்புரவு உதவியாக இருக்கும் சவர்க்காரம், அசுத்தங்களை அகற்ற பயன்படும் ஒரு செயற்கை முறையில் தயாரிக்கப்படும் ரசாயன பொருள் ஆகும்.
உலோகம், உப்பு மற்றும் சுண்ணாம்பு எச்சங்கள் போன்ற மண்ணில் இயற்கையில் கனிமமாக இருக்கலாம் அல்லது தயிர் அல்லது இரத்தம், சர்க்கரை மற்றும்
பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி செய்முறை !
மாவுச்சத்தில் கார்போ ஹைட்ரேட் அல்லது விலங்கு மற்றும் தாவர எண்ணெய்களில் கொழுப்பு போன்ற புரதங்களில் கரிமமாக இருக்கலாம்.
சவர்க்காரம் பெட்ரோ கெமிக்கல் தயாரிப்பு களிலிருந்து பெறப்படுகிறது மற்றும் பொதுவாக சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு போன்ற செயல்முறைகளில் பயன்படுத்தப் படுகின்றன.
சரி கைகளையும் உடம்பையும் சுத்தப்படுத்த மட்டுமா சகர்க்காரம் உண்டு? இல்லவே இல்லை. வேறு என்ன வெல்லாம் செய்யலாம் என்பதை இன்று சொல்லித் தரவுள்ளோம்.
கதவின் சரணல்களுக்கு/ திருகாணி இறுக்குவதற்கு
அந்த சத்தம் மீண்டும் கேட்காமல் இருக்க சிலர் கதவை அகற்றி புதிய சரணல்களை மாற்றுகிறார்கள். மேலும் சிலர் கடைகளில் விற்கப்படும் பலவிதமான இரசாயன திரவங்கள் மற்றும் ஒயில்களை பயன் படுத்துகின்றனர்.
மசாலா குஸ்கா செய்முறை !
ஆனால் குறைந்த செலவில் சுலபமாக வேலையை கச்சிதமாக முடிக்க எண்ணுபவரே ஒரு துண்டு சோப்பை பயன்படுத்தி திருகாணியை திருகுவார்.
ஒரு துண்டு சோப்பில் ஆணியை சற்று உருட்டி எடுத்து, அதனை இறுக்குவதால் சரணலில் இருந்து சத்தமும் கேட்காது, சுலபமாகவும் இறுக்கி விடலாம்.
குளியலறை கண்ணாடி
அதன் பின்னர் ஒரு மென்மையான துணி அல்லது திசு மூலம் மெதுவாக அழுத்தி துடைக்கவும். அதன் பின்னர் பாருங்கள் கண்ணாடியின் நிறம் முன்னரைவிட பிரகாசமாக தெரியும்.
திண்டுக்கல் மட்டன் பிரியாணி செய்வது !
துணி வைக்கும் அலுமாரி
எமது தாத்தா பாட்டி காலத்திலிருந்தே துணிகளை வாசனையாகவும், புதியதாகவும் வைத்திருக்க கற்பூர பந்துகளை பயன் படுத்தினோம்.
அதற்கு பதிலாக எப்போதாவது நீங்கள் சவர்க்காரத்தை பயன்படுத்த முயற்சித்துள்ளீர்களா? கற்பூர பந்துகளின் மூக்கை அரிக்க வைக்கும் வாசனையை அதிகமானோர் விரும்ப மாட்டார்கள்.
மென்மையான மற்றும் புத்துணர்வான வாசனைக்காக துணிகளுக்கு இடையில் இனி சவர்க்காரத்தை வைக்கவும்.
சுவற்றில் ஏற்பட்ட சிறு துளைகள்
அவற்றை பார்க்கும் போது சில சமயங்களில் எரிச்சலும் ஏற்படும். அதற்கென்று, புதிய சுவரையா கட்டமுடியும்? அல்லது அதை மறைக்க மேசன் ஒருவரையா கொண்டுவர முடியும்?
அதெல்லாம் தேவைப்படாது என்று தான் நாங்கள் சொல்கிறோம். ஆம் ஒரு சவர்க்காரக் கட்டியினால் முடியும். அதற்கு உலர்ந்த சோப்பின் ஒரு துண்டை பயன்படுத்தி துளையுள்ள அப்பகுதியில் சவர்க்காரத்தை ஒத்தி விட வேண்டும்.
மனை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய பட்டா விவரம் !
உடைந்த கண்ணாடித் துகள்கள்
வீட்டில் கண்ணாடி பொருட்கள் உடைந்தால் நாம் விரைவாக தும்புத்தடியால் பெருக்கி எடுத்து விடுவோம். ஆனால் சிறு சிறு கண்ணாடி துண்டுகள் தும்புத்தடிக்கு அகப்படாமல் அதே இடத்தில் இருக்கும்.
அவை பிறகு நம் கால்களில் குத்தி அவதிப்படக் கூடும்.
கண்ணாடி பொருள் உடைந்த இடத்தில் ஒரு சவர்க்காரக் கட்டியை கொண்டு தேய்த்து எடுப்பதன் மூலம் அந்த இடத்திலுள்ள சிறு சிறு கண்ணாடி துண்டுகளும் சவர்க்காரத்தில் ஒட்டிக் கொள்ளும்.
நுளம்புக் கடியின் அரிப்பு
சிலருக்கு அந்த அரிப்பு நீண்ட நேரம் இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் நுளம்பு கடித்த இடத்தில் ஒரு ஈரமான சவர்க்காரத்தை வைத்து தேய்த்து விட்டாலும் அரிப்பு நின்று விடும்.
பெங்களூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
தையல் ஊசி
துணிக்குள் ஊசி நுழையாமல் அவஸ்த்தைப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம். அநேகமாக தையல்காரர்கள் இந்த பிரச்சினையை அனுபவிப்பார்கள்.
அந்த நேரத்தில் ஒரு சவர்க்காரத்தை எடுத்து அதில் அந்த தையல் ஊசியை தேய்த்துப் பாருங்கள். இலகுவாக தைக்கலாம்.