டேஸ்டியான ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் செய்வது எப்படி?





டேஸ்டியான ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் செய்வது எப்படி?

0
பொதுவாக ரசம் என்றால் அதில் தக்காளியும், ரசப்பொடியும் இருக்கும். ஆனால் இந்த இரண்டும் இல்லாமலேயே ரசம் செய்யலாம் தெரியுமா? ஆம், 
டேஸ்டியான ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் செய்வது எப்படி?
ஸ்ரீலங்காவில் ரசமானது தக்காளி, ரசப்பொடி எதுவும் சேர்க்காமல் செய்யப் படுமாம். முக்கியமாக இந்த ரசத்தில் வெங்காயம் சேர்க்கப்படும். இந்தியர்களின் உணவில் ரசத்திற்கு முக்கிய பகுதி உண்டு. 
மதிய வேளையில் ரசம் சாப்பிட்டால் தான் நிறைய பேருக்கு சாப்பிட்ட உணர்வே இருக்கும். மேலும் ரசமானது பல்வேறு மசாலா பொருட்களைக் கொண்டுள்ளதால், அது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கிறது. 

தினமும் ஒரு கப் ரசம் குடித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும், மலச்சிக்கல் தடுக்க்ப்படும், கர்ப்பிணிளுக்கு நல்லது, ஏன் எடை இழப்பிற்கு கூட உதவும்.
 
உங்களுக்கு ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. 

அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் : .
 
பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
 
பூண்டு - 4-6 பல் (நறுக்கியது)
 
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
 
மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
 
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
 
மிளகு - 1 டீஸ்பூன்
 
வரமிளகாய் - 1-2
 
சோம்பு - 1/4 டீஸ்பூன்
 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
 
உப்பு - சுவைக்கேற்ப
 
புளி நீர் - 350 மிலி
 
தண்ணீர் - 350 மிலி
செய்முறை : .
டேஸ்டியான ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் செய்வது எப்படி?
முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சோம்பு, சீரகம், மல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளிச்சாறு மற்றும் நீரை ஊற்ற வேண்டும். 

அதன் பின் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, 3 நிமிடம் உயர் தீயில் வைத்து மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும். 
பின் மூடியைத் திறந்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, ஒரு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, பெருங்காயத் தூள் சேர்த்து கிளறினால், சுவையான ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)