லவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது சுக்கான் கீரை.இதில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தயாமின், ரைபோ பிளேவின், கால்சியம் அதிக அளவில் உள்ளது.
மலச்சிக்கலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் கீரையில் ஒன்று சுக்கான் கீரை.சுக்கான் கீரையில் அதிக அளவில் கால்சியம் சத்து இருப்பதால், வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டு வலியை கட்டுப் படுத்தலாம்.
தேள் கொட்டிய இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், விஷமும் விரைவில் வெளியேறும்.
பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள குறியீட்டு எண்கள் குறிப்பது என்ன? #PETBOTTLE
சுக்கான் கீரையை பாசிப் பருப்புடன் கலந்து வேக வைத்து மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண் குணமாகும். இதில் புளி சேர்க்காமல் இருப்பது நல்லது.
சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும்.
ஓசோன் அழிந்தால் ஓராயிரம் ஆபத்து !
அப்படிப் பட்டவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னி போல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
ஆஸ்துமா நோய் பாதிக்கப் பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக சுக்கான் கீரை இருக்கிறது. இந்த சுக்கான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சீராக சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குகிறது.
சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.
வாடிக்கையாளரை புரிந்து கொண்டால் வெற்றி தான் !
சுக்கான் கீரையை சூப் செய்து அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும். இந்த சூப்புடன் மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலையின் வீரியத்தை குறைக்கும்.