கொலஸ்டிராலைக் குறைக்கும் பண்புகள் கொண்ட சோயா ஜப்பானியர்களின் மிக முக்கிய உணவாக இருக்கிறது. பெரும்பாலான புரத உணவுகளில் அமிலத் தன்மை இருக்கும்.
கொலஸ்டிராலை கட்டுப்படுத்தும் சோயா :
நம்முடைய தினசரி உணவில் சோயா பீன்ஸை சேர்த்துக் கொள்ளும் போது அது உடலின் ஒட்டுமொத்த கொலஸ்டிராலைக் கட்டுப் படுத்துவதோடு, எல்டிஎல் கொலஸ்டிரால் எனும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
ஒரு நாளைக்கு 50 கிராம் அளவுக்கு சோயா பீன்ஸை உணவில் சேர்த்துக் கொண்டாலே 3 சதவீதம் அளவுக்கு கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க முடியுமாம்.
மாரடைப்பை தடுக்கும் சோயா பீன்ஸ் :
சோயா பீன்ஸில் உள்ள கொலஸ்டிராலை கட்டுப்படுத்தும் பண்புகளும் அதிகப் படியான நார்ச்சத்துக்களும் சேர்ந்து உடலில் உள்ள கொலஸ்டிராலை உறிஞ்சிக் கொள்கின்றன.
இதனால் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்பட்டு மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கச் செய்கிறது.
(nextPage)
ஜீரண சக்தியை மேம்படுத்தும் சோயா பீன்ஸ் :
இந்த நார்ச்சத்துக்கள் ஜீரண ஆற்றலை மேம்படுத்தி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
ருசியான இறால் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
புற்றுநோயை தடுக்கிறது :
சோயா பீன்ஸ்களில் காணப்படும் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற ஹார்மோன்களுடன் தொடர்புடைய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
புற்றுநோய் உள்ளவர்கள் தங்களது உணவில் சோயா பீன்ஸ்களை தவறாமல் எடுத்துக் கொண்டால், நல்ல பலனைத்தரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மெனோபஸ் அறிகுறிகளை குறைக்க சோயா பீன்ஸ் :
மெனோபஸ் காலகட்டம் என்பது பெண்களுக்கு சவாலான காலகட்டங்களில் ஒன்று. இந்த சமயத்தில் வழக்கமாக மாதவிடாய் சுழற்சிகளில் மாற்றங்கள், மனநிலை மாற்றங்கள் (mood swings) ஆகியவை உண்டாகும்.
சோயா பீன்ஸில் உள்ள ஐசோ பிளவனாய்டுகள் பெண்களில் உடலில் ஏற்படும் இந்த ஹார்மோன் மாற்றங்களை முறைப்படுத்தி அவர்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்கள் மற்றும் ஹாட் பிளாஷஸ் ஆகியவற்றையும் சரிசெய்ய உதவுகிறது.
ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க சோயா பீன்ஸ் :
குறிப்பாக டைப் 2 நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் சோயா பீன்ஸை பாலாகவோ அல்லது வேக வைத்தோ ஏதேனும் ஒரு வகையில் தினசரி உணவில் சேர்த்து வர ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
அது மட்டுமின்றி தினசரி உணவில் சோயா எடுத்துக் கொள்ளும் போது நீரிழிவைப் போன்ற நாள்பட்ட உடலில் உள்ள நோய் நிலைகளையும் இது சரிசெய்கிறது.
(nextPage)
எலும்புகளை பலப்படுத்த :
சோயா பீன்ஸ் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சோயா பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்து சோயா பீன்ஸினை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
சீனியில் உள்ள விதமான தீமைகள் என்ன? தெரியுமா?
மார்பக புற்றுநோயை தடுக்கும் சோயா :
சோயாவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
பெண்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உணவில் சோயாவை சேர்த்துக் கொள்ளும்போது மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
சோயா பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
இது நம்முடைய அன்றாட புரதத் தேவையில் 34 சதவீதத்தை நிறைவு செய்து விடும். அரை கப் சோயா பீன்ஸில் இருந்து 5.6 கிராம் அளவுக்கு நார்ச்சத்து இதில் நிறைந்திருக்கிறது.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நம்முடைய உடலுக்கு 25 கிராம் அளவுக்கு நார்ச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.
இதை தவிர சோயாவில் சர்க்கரை மிகக் குறைவு. வைட்டமின்களும் மினரல்களும் அதிகம் கொண்ட மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவாகும்.