திருமணத்தில் விருந்தில் ஐஸ்கிரீம் வைத்தால், அதற்காக தனி கூட்டமே இருக்கும். மெரினா போன்ற கடற்கரைக்கு சென்றாலும் பெரும் பாலானோரின் தேர்வு ஐஸ் வாங்கி சாப்பிடுவதாக தான் இருக்கும்.
சிறிய வயதில் சிலர் குச்சி ஐஸ் சாப்பிட்ட அனுபவம் இருக்கும். ஓவ்வொரு நிறங்களில் ஒவ்வொரு சுவையில் நண்பர்களுடன் குச்சி ஐஸ் சாப்பிட்ட அழகான நினைவுகள் பலரிடமும் இருக்கும்.
இன்றும் குச்சி ஐஸ்க்கு மவுசு குறையவில்லை. பாக்கெட்டுகளில் குச்சி ஐஸ் விற்கப்படுகிறது. ஐஸ் சாப்பிட விரும்பும் நமக்கு அது ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியமான இடத்தில் தயாரிக்கிறார்களா என்பதை சிந்திப்பதில்லை.
சுகாதாரமற்ற நீர், கலவை பொருட்களில் செய்யப்படும் ஐஸ்கிரீமால் உடலுக்கு தான் கேடுகள் அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.
தயாரிப்பது எப்படி?
அதில், நீள நிற டிரம்பில் நிரப்பி இருக்கும் தண்ணீரில் ஆரஞ்சு நிறத்துக்கான சாயமும், சில சுவையூட்டிகளும் கலந்து மெஷின் மூலம் ஐஸ் தயாரிக்கப் படுகிறது.
தயாரிக்கப்பட்ட ஐஸ்கள் மெஷின்கள் மூலம் ஒவ்வொன்றாக பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.
ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு கரு முட்டைகள் தயாரித்தல் !
இந்த வீடியோவை பார்த்த பலரும், ஆரோக்கியமற்ற முறையில் ஐஸ் தயாரிப்பதாகவும், நிறத்துக்கும் சுவைக்கும் வேதிப்பொருட்கள் கலப்பது உடலுக்கு ஆபத்தை தரும் என்றும்,
இது போன்ற அபாயகரமான தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி அளித்தார்கள் என்றும் ஒவ்வொருவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது போன்று பாக்கெட்டிகளில் விற்கும் ஐஸ்களை வாங்கி சாப்பிட வேண்டாம் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.