பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்திலிருந்து பெறப்படுவது. அதில் மிக உயர்ந்த சத்துகள் உள்ளன. நல்ல கார்போ ஹைட்ரேட் அதிகம் கொண்டது. கொழுப்பு குறைவானது.
தவிர நிறைய வைட்டமின்கள், தாதுச்சத்துகள் கொண்டது. மரத்திலிருந்து நேரடியாகப் பெறப்படுவது என்பதால் இதில் செயற்கை சேர்க்கை எதுவும் இருப்பதில்லை.
உடல் எடையை அதிகரிக்கவும் அதேநேரம் தேவைப் படுவோருக்கு உடல் எடையைக் குறைக்கவும் பாதாம் பிசின் பயன்படுகிறது. யாருக்கு என்ன தேவையோ, அதற்கேற்ப இது வேலை செய்யும்.
ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைத்து விட்டால். மறுநாள் அது நன்கு ஊறி, ஜெல்லி போன்று மாறியிருக்கும்.
எடையை அதிகரிக்க நினைப்போர் கெட்டியான பாலில், ஊற வைத்த பாதாம் பிசினுடன் நாட்டுச் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிக்கலாம்.
உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !
அதுவே எடையைக் குறைக்க நினைப்பவர்கள், பாலுக்கு பதில் வெந்நீரில் பாதாம் பிசின் சேர்த்துக் குடிக்கலாம். அது வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்தும்.
அதன் மூலம் எடை குறையும். கர்ப்பப்பை, அடிவயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களும் அடிக்கடி பாதாம் பிசினை சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம் பிசினில் துத்தநாகச் சத்து மிக அதிகம் என்பதால் ஆண், பெண் இருவருக்குமே மிகவும் நல்லது. ஆண்களுக்கு விந்தணு உற்பத்திக்கு மிகவும் நல்லது. விந்து நீர்த்துப் போகும் பிரச்னைக்கும் உதவும்.
பிரசவித்த பெண்களுக்கும் பாதாம் பிசின் நல்லது. எனவே அதை ஜூஸில், மில்க் ஷேக்கில் சேர்த்துக் கொடுக்கலாம். பாதாம் பிசினை உருட்டி அதில் இனிப்புகள் செய்து கொடுக்கலாம்.
சருமத்துக்கும் பளபளப்பை, பொலிவைக் கொடுக்கக் கூடியது பாதாம் பிசின். இதில் உயிர் சத்துகள் அதிகம் என்பதால் தினமும் 5 கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.
கிட்னி மற்றும் புராஸ்டேட் சுரப்பிகளுக்கும் வலு சேர்க்கக் கூடியது. உடல் கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றக் கூடியது.
அடிக்கடி சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு உள்ளாகிறவர்கள், பாதாம் பிசின் சாப்பிடலாம். நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.
கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம் !
பாதாம் பிசின் குளிர்ச்சி என்ற எண்ணத்தில் இதை எடுக்கத் தயங்குபவர்கள் இருக்கிறார்கள். வெந்நீரிலோ, சூடான பாலிலோ கலந்து குடிக்கும் போது இது பிரச்னையை ஏற்படுத்துவதில்லை.
சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் வாரம் ஒருமுறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.