மோர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் !





மோர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் !

0

தயிரோடு ஒப்பிடும் போது மோர் அமுதம். இந்திரனுக்குக் கூடக் கிடைக்காத அற்புதம் என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். அன்றைய காலங்களில் வீடுகளில் வெயிலில் களைத்து வருபவர்களுக்கும் இல்லத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் அன்புடன் மோர் தருவது வழக்கம். 

மோர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் !
இப்போது குளிர்பானங்கள் அருந்துவதே நாகரிகம் என்று மோர் அருந்தும் வழக்கம் குறைந்து விட்டது. 

எத்தனை வண்ணங்களில் குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? 

எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்கவல்ல மோரினால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வோம். 

கோடையின் உஷ்ணத்தைத் தணிக்கவும் நோய் நொடிகளின்றி வாழவும் மோரைப் பருகுவோம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

(getCard) #type=(post) #title=(You might Like)

மோரினால் கிட்டும் நன்மைகள்:

தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது. உடல் எடையைக் குறைக்க வல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.

பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப் படுத்தவும் வயிற்று வலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.

மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக் கெல்லாம் மோர் சிறந்த மருந்து.

மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.

நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு.

பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு இரண்டு விதங்கள்: ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.

வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம். 

போலியான 500 ரூபாய் நோட்டை கண்டறிவது எப்படி?

மோரை அ‌ப்படியே அ‌ளி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌க்‌கு‌ம் எ‌ன்று பய‌ப்படு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள், ‌சி‌றிய வாண‌லி‌யி‌ல் த‌யிரை லேசாக கொ‌தி‌க்க வை‌த்து ‌சி‌றிது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் கல‌ந்து சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து கொடு‌த்து வரலா‌ம்.

காமாலை நோயைச் சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும். எளிதில் செய்து விடக் கூடிய மோரைக் குடும்பத்திலுள்ள அனைவரும் பருகிப் பயன் பெற வேண்டும்.

(nextPage)

சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்:

மோர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் !

முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வருவது தெ‌ரியு‌ம். சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாக உ‌ள்ளது.

சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த து‌ணியை‌க் க‌ட்டு‌ப் போ‌ட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு ‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.

தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

சுவையான வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி?

குறிப்புகள்:

வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்குத்‌ தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.

கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்து விடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும் வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும்.

ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக் கூடாது. மோர் சாதமும் கூடாது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)