அசைவ உணவு வகையான நண்டை சமைத்து உண்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அசைவ உணவுகள் என்றாலே பெரும்பாலும் மீன், சிக்கன், மட்டன் போன்ற உணவுகள் தான் நம் நினைவுக்கு வரும்.
எப்போதும் நண்டு உண்ண முடியாவிட்டால் கூட 2 வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணலாம். இதிலுள்ள நன்மைகளை காணலாம்.
நண்டில் மற்ற அசைவ உணவுகளை ஒப்பிடும் போது குறைந்த கலோரிகள் தான் உள்ளது. நீங்கள் 100 கி நண்டு எடுத்து கொண்டால் 1.5 கி தான் அதில் கொழுப்பு இருக்கும்.
உங்களின் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள !
மிச்சத்தில் புரத சத்து தான் காணப்படும். எடை குறைக்க நினைப்பவர் களுக்கு நண்டு நல்ல தேர்வாக இருக்கும். நண்டு உண்ணும் போது வைட்டமின் ஏ கிடைக்கிறது.
புரோட்டீன்கள் அதிகம் உள்ளதால் தான், நண்டு உடலுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளன. அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது. தசைகளின் சீரமைப்புக்கு இந்த நண்டுகள் உதவுகின்றன.
குறைவான கொழுப்பு உள்ளதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களிலிருந்து காத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இன்னும் சொல்லப்போனால், இதய நோயாளிகளுக்கு நண்டு மிகச்சிறந்த உணவாக விளங்குகிறது.
இது கண் பார்வை மேம்பட உதவும். கண் புரை, கருவிழி சிதைவு ஆகிய நோய் ஏற்படாமல் தடுக்கவும் நண்டு உண்ணலாம். இதில் காப்பர், வைட்டமின் பி2, செலினியம் ஆகியவை காணப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நண்டு சாப்பிடலாம். இதில் காணப்படும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது.
இதில் உள்ள ஜின்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்றவை எரித்ரோ சைடுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இது புதிய திசுக்களை உருவாக்குவதில் முனைப்பாக செயல்படும்.
பிலிப்பைன்ஸ் நாட்டு அரசன் கதை... டகிலா கொடுத்த வாள் !
முடக்குவாதம், இரத்த சோகை வராமல் தடுக்கும். நண்டு உணவில் உள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது. நன்மைகள் இருந்தாலும், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் நண்டு உண்ணக் கூடாது.
செயல்பாடுகள்:
நண்டு சாப்பிடுவது மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளை சிறப்பாக செயல்படவும், நரம்பு மண்டலம் செயல்பாடுகளுக்கும் இந்த நண்டு உதவி செய்கிறது.
குறைபான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்கக் கூடியவர்களுக்கு நண்டு பெஸ்ட் சாய்ஸ்ஸாக உள்ளது. இதிலுள்ள வைட்டமின் A கண்பார்வைக்கு உதவுகிறது.
கரிமக்கூறுகளான ரெட்டினொல், ரெட்டினால், ரெட்டினியோக் அமிலம் , பீடா கரோட்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பிரதான இடத்தை பிடிக்கின்றன.
கண் புரை மற்றும் கருவிழி சிதைவு போன்றவற்றை தடுப்பதிலும் பல நன்மைகளை தருகின்றன.