தீவிரமாக எடை குறைப்பில் ஈடுபட முயன்ற போது நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு வாரம் தினமும் தர்பூசணிப் பழம் மட்டுமே சாப்பிட்டுப் பாருங்களேன். வார இறுதியில் நிச்சயமாக 1 கிலோ குறைந்து விடுவீர்கள்.
இப்படி உங்களுக்கும் உங்களுடைய நண்பர் குழாம் பல்வேறு இலவச எடை குறைப்பு ஆலோசனைகளை அள்ளி வழங்கி இருக்கலாம்.
ஆனால், தயவு செய்து உரிய மருத்துவ ஆலோசனை இன்றி அப்படி யெல்லாம் எடை குறைப்பில் இறங்கி விடாதீர்கள்.
அல்சரும் அதன் அறிகுறிகளும் ! #ulcers
வெறும் பழச்சாறு மட்டுமே உண்டு இரண்டு மாதங்கள் உயிர் வாழ்வதென்பது எளிதான விஷயமல்ல. அதற்குள் எடை குறகிறதோ இல்லையோ உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களை இழக்கத் தொடங்கி விடுவோம்.
நமது உடல் ஆரோக்யமாக இருக்க கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புச் சத்து, விட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள், என அனைத்தும் தான் தேவை.
இப்போது இந்த வாட்டர் மெலன் கட்டுக்கதைக்கு அனுபவம் வாய்ந்த நியூட்ரிசனிஸ்ட் என்ன விளக்கம் தருகிறார் என்று பார்ப்போமா?
அமெரிக்காவில் நியூட்ரிஷனில் முதுகலை அறிவியல் (எம்.எஸ்.) பட்டம் பெற்று 15 வருட பணி அனுபவம் வாய்ந்தவரான நியூட்ரிசனிஸ்ட் மைக்கேல் கொலாஞ்சலோ என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
தர்பூசணி குறைந்த கலோரிகள் கொண்ட கொழுப்புச் சத்து அற்ற ஒரு பழமாகும், இது எடை இழப்புக்கான உணவாக மிகச்சிறந்த முறையில் செயலாற்றுகிறது.
ஆனால், நீங்கள் நினைக்கிற படி ஜீம்பூம்பா மந்திரத் தனமாக அல்ல. தர்பூசணி மட்டும் உடல் எடையை குறைக்காது.
இருப்பினும், உணவுடன் அல்லது சிற்றுண்டியாக உட்கொள்ளும் போது, அதில் உள்ள அதிக நீர்ச்சத்து உங்களை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
வேறு விதமாகச் சொல்வதானால், நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுகளின் அளவு நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
அப்படிப் பார்த்தால், தர்பூசணியை கொஞ்சமாக உண்டாலும் கூட அதில் சிறிதளவு கார்போ ஹைட்ரேட் உள்ளது என்பது நிஜமே!
ஆகவே சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை மருத்துவர் ஆலோசனையின் பேரில் மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
ஆகவே, அப்படிப் பட்டவர்களுக்கு மேலே உள்ளதைப் போன்ற இலவச ஆலோசனைகள் எல்லாம் தற்கொலைக்குச் சமம். உண்மையில் தர்பூசணியில் மிக அதிக நீர்ச்சத்து மற்றும் மிகக் குறைந்த கொழுப்புச் சத்து உள்ளது.
எடை இழப்பு முயற்சிகளில் இது ஒரு சிறந்த இனிப்பு மாற்றாகவும் அமைகிறது. தர்பூசணி உண்ணும் போது ஒவ்வொரு 100 கிராமுக்கும் 30 கிலோ கலோரிகள், சுமார் 0.4 கிராம் நார்ச்சத்து மற்றும் அதிக சதவீத நீரை வழங்குகிறது.
எனவே, இப்படி தான் உடல் எடையை குறைக்க விரும்பு பவர்களுக்கு தர்பூசணி ஒரு நல்ல தேர்வாகப் பொருந்தக் கூடுமே தவிர மேலே குறிப்பிட்டதைப் போல ஒரேயடியாக தர்ப்பூசணி மட்டுமே உண்பதால் அல்ல. என்கிறார் நியூட்ரிசனிஸ்ட் மைக்கேல் கொலாஞ்சலோ.
மேலும் விளக்கமாகச் சொல்வதானால் ஒரு தர்பூசணியின் எடையில் 90% தண்ணீர் இருப்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சாப்பிடுவதற்கு இது சிறந்த பழங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது.
கூடுதலாக இதில் உள்ள லைக்கோபென் எனும் நிறமியானது கொழுப்பை எரிக்க உதவக் கூடியது என்கிறார்கள் அதன் காரணமாகவும் இதை எடை இழப்புக்கு உகந்த பழமெனக் கருத வலுவான வாய்ப்பு உண்டு.
119 ஆண்டுகள் வாழ்ந்த பெண்... ரகசியம் இது தான் !
எனவே எடை குறைப்பு ஆலோசனைகள் எங்கிருந்து கிடைத்தாலும் எப்படிக் கிடைத்தாலும் உடனே செயலில் இறங்கி விடாதீர்கள். யோசியுங்கள், நிபுணர்களிடம் கலந்து பேசி சரியான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.