பிராய்லர் சிக்கன்... ஹார்மோன் ஊசி போடப்படுகிறதா? எது உண்மை?





பிராய்லர் சிக்கன்... ஹார்மோன் ஊசி போடப்படுகிறதா? எது உண்மை?

0

கோழி இறைச்சி ஆரோக்கியமான ஒன்று ஆகும். கோழி இறைச்சி உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பிராய்லர் கோழி மீது அதிக மோகம் கொண்டுள்ளனர்.

பிராய்லர் சிக்கன்... ஹார்மோன் ஊசி போடப்படுகிறதா? எது உண்மை?
பிராய்லர் கோழி என்பது ஒரு ஆண்பால் பெண்பால் அற்ற உயிரினம். இதனை வளர்ப்பதற்கு பலவித வேதிப்பொருட்களை பயன் படுத்துகின்றனர் மற்றும் இதன் வளர்ச்சி மிகவும் குறைந்த நாட்களில் முழுமை அடைகின்றது.

பிராய்லர் கோழிகள் குறைந்த நாள்களில் அதிக எடையுடன் வளர்வதற்காக ஒவ்வொரு கோழிக்கும் ஹார்மோன் ஊசிகள் செலுத்தப் படுகின்றன என்ற தகவலை தினமும் கேட்க முடிகிறது. 

மெலஸ்மா என்ற தோல் கோளாறை குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்தியங்கள் !

இப்படி ஊசி செலுத்தப்படும் பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும். இதனால் கேன்சர் போன்ற நோய்களும் வரலாம் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. இதனால் பிராய்லர் கோழி விற்பனை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. 

இதற்கிடையே பிராய்லர் கோழி உண்ணுவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்ற கருத்தை பிராய்லர் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்கள்.

பிராய்லர் கோழிகளுக்கு வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப் படுவதாக உள்ள தகவல் தவறானது. அதனால் பிராய்லர் கோழிகளைச் சாப்பிடக் கூடாது என்ற பிரசாரம் நாடு முழுவதும் பரவி வருகிறது. 

ஹார்மோன் ஊசி போடுவது என்பது விலையுயர்ந்த விஷயம். பிராய்லர் கோழிகள் குறைந்த நாள்களில் நல்ல எடைக்கு வருவதற்குக் காரணம் தரமான கோழி இனம், சரிவிகிதத் தீவனம், நோய்த்தடுப்பு மற்றும் 

நோய்க் கட்டுப்பாடு போன்ற காரணிகளே அதிக பங்கு வகுகின்றன என்று பாலக்காடு பறவை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் விஞ்ஞானி ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிராய்லர் கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள், பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப் படுகிறது என்பதை நிரூபித்தால் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். 

சுவையான கிரில்டு இறால் செய்வது எப்படி?

இது குறித்து அவர்கள் கூறுகையில், அசைவ பிரியர்களின் மெனுவில் கண்டிப்பாக பிராய்லர் கோழிகளுக்குத் தனி இடம் இருக்கும். ஆனால், பிராய்லர் கோழி தொடர்பான தவறான தகவல்கள் நாடு முழுவதும் பரவி வருகின்றன. 

தற்போது நாங்கள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பிராய்லர் கோழிகள் மீதான பிசாரத்துக்குப் பதிலடியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிராய்லர் கோழிப்பண்ணையாளர் ஜெயக்குமாரிடம் பேசிய போது, பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி செலுத்தப் படுகிறது என்பது 100 சதவிகிதம் பொய்யான தகவல். 

கோழிகளுக்கு நாங்கள் சமச்சீரான உணவுகளையே தருகிறோம், கோழிகளுக்குத் தேவையான புரோட்டீன், விட்டமின் மற்றும் கார்போ ஹைட்ரேட் ஆகியவற்றைத் தேவையான விகிதா சாரத்தில் தீவனங்கள் மூலம் வழங்கப் படுகிறது. 

பிராய்லர் சிக்கன்... ஹார்மோன் ஊசி போடப்படுகிறதா? எது உண்மை?

இதுவே கோழிகளின் எடை அதிகரிக்கக் காரணம். சாதாரணமாக நாட்டுக் கோழிகள் ஆறு மாதங்களில் உண்ணும் தீவனங்களை பிராய்லர் கோழிகள் 40 நாள்களில் உண்ணுகின்றன. 

அது மட்டும் தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். மற்றபடி நாங்கள் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்துவதில்லை. 

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆட்டோ ஓட்டுநர் !

பறவைக் காய்ச்சல் போன்ற நோய் தடுக்காமல் இருக்க குழந்தைகளுக்கு அளிப்பதைப் போல கோழிகளுக்கும் தடுப்பூசி போடுவோம். 

கோழிகளுக்கு போடும் தடுப்பூசிகளால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது நிரூபிக்கப்படவும் இல்லை என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)