கீரைகள் இயற்கை அளித்துள்ள அருட்கொடை. உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறது மருத்துவம்.
கீரையை கடைந்தும் சாப்பிடலாம், சூப்பாகவும் குடிக்கலாம். காய்களுடன் சேர்த்து சலாடாகவும் சாப்பிடலாம். உடம்பிற்கும் வயிற்றுக்கும் மிகமிக நல்லது. மலம் இலகுவாக கழியும்.
முட்டை விரும்பிகள் விரும்பி உண்ணும் எக் புர்ஜி செய்வது எப்படி?
உடல் ஆரோக்கியத்தை காக்க முண்ணனியில் நிற்பது கீரைகளும் காய்கறிகளும் தான். கீரை மிக மலிவானது, காய்கறிகளை விட. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
உடலுக்கு தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி1, பி2, பி6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன.
கீரைகளில் உள்ள கரோட்டினாய்கள் வைட்டமின் ஏ - வாக மாற்றப்பட்டு உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.
சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. கண் பார்வைத் திறனை பராமரிப்பதில் கரோட்டினாய்டு நிறமிகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டீன் மிக அவசியமானவை.
இவை கண் பார்வைக்கு துணை புரிவதுடன், விழித்திரையின் மாகுலர் சிதைவு அபாயத்தையும் குறைக்கின்றன.
மேலும், கண்புரை உருவாவதை தடுப்பதுடன், இதில் இருக்கும் ஆக்ஸிடான்டுகள் வயதாவதையும் குறைக்கின்றன. இந்த சத்துக்களும் கீரைகளில் நிரம்ப கிடைக்கின்றன.
வெஜ் மசாலா சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான அனைத்து பாகங்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான மிக அத்தியாவசிய வைட்டமின்கள் கீரைகளில் இயல்பாகவே கிடைக்கும் போது,
அதிகப் படியான கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது நமது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. இவை இருதய நோய்க்கு காரணமாக அமைவதுடன், டி.என்.ஏகளையும் சேதப்படுத்துகின்றன.
இதனால், உடலில் புற்றுநோய் உருவாக அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. கீரையில் இருக்கும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்கள், ப்ரீரேடிக்கல்கள் அபாயத்தை குறைத்து, உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கின்றன.
புருவ முடிகளைத் திருத்தும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல் !
கீரையில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி, மிகப்பெரிய நோய் அபாயத்தில் இருந்து காக்க உதவுகின்றன.அளவுடன், தினமும் சாப்பிடலாம்.