கரப்பான் பூச்சி வீட்டுக்குள் வராமல் எப்படி கட்டுப்படுத்துவது?





கரப்பான் பூச்சி வீட்டுக்குள் வராமல் எப்படி கட்டுப்படுத்துவது?

0

சமையலறை எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ  அளவுக்கு வீட்டின் சுத்தமும் ஆரோக்கியமும் இருக்கும். சமையலறை அசுத்தமாக இருந்தால் அங்கே பூச்சிகள் வங்கிக்குள் சேரும். 

கரப்பான் பூச்சி வீட்டுக்குள் வராமல் எப்படி கட்டுப்படுத்துவது?
அதன் கழிவுகள், முட்டைகள் உணவு பொருட்கள் அல்லது உணவில் சேர்ந்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவற்றுக்கான உணவும் ஈரப்பதமான சூழலும் இருக்கும் இடங்களில் கரப்பான் பூச்சிகள் செழித்துப் பெருகுகின்றன. 

ஆகவே, அவற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத்தைப் பேணுவது அவசியம். அடைசல், அதில் புழுக்கமான சூழல் இருந்தால் போதும் அது கரைப்பான் பூச்சிகளின் சொர்க்கமாக மாறி விடும். அதைத் தவிர்க்க செய்ய வேண்டியது.

சமைக்கும் போது வரும் குப்பைகளை அங்கங்கு போடாமல் சரியாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும். அதே போல நீங்கள் பயன்படுத்தும் குப்பைத் தொட்டிகள் மூடக்கூடிய வசதி கொண்டதாக நல்லது.

அதே போல இரவு நேரத்தில் குப்பைகளை வீட்டுக்குள் வைப்பதற்குப் பதிலாக, வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டும். அது வீட்டிற்குள் கரப்பான் வரும் வைப்பைக் குறைக்கும்.

வீட்டில் குப்பை அதிகமாகச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சேர்ந்த குப்பைகளை வெளியில் கொட்டுவது நல்லது. 

மக்கும் குப்பைகளை அப்படியே போடாமல் மாநில ஒரு குழி வெட்டி மூடி வைத்து விடுவது வீட்டை சுற்றி கரப்பான் பூச்சிகள் அலைவதைக் குறைக்கும். சாப்பிட்ட பாத்திரங்களை உடனடியாகக் கழுவி வைத்துவிட வேண்டும். 

மீதமாகும் உணவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.  சிங்கில் அப்படியே போட்டு வைத்தால் அது சிங்க் ஓட்டை வழியாக கரப்பனை அழைத்துக் கொண்டு இருக்கும்.

(getCard) #type=(post) #title=(You might Like)

ஜன்னல்கள், கதவு இடுக்கு, துவாரங்கள் வழியாகவும் கரப்பான் பூச்சிகள் வர வாய்ப்பு இருப்பதால் தேவையில்லாத நேரங்களில் கதவுகளை அடைத்து வைக்கலாம். 

அதே போல இரவு நேரங்களில் தண்ணீர் வெளியேறும் ஓட்டைகளை அடைத்து வைப்பதும் கர்ப்பங்கள் வீட்டிற்குள் வருவதைத் தடுக்கும்.

கரப்பான் பூச்சி வீட்டுக்குள் வராமல் எப்படி கட்டுப்படுத்துவது?

அட்டைப் பெட்டிகள் மரக்கூழில் இருந்து தயாரிக்கப் படுகின்றன. இவை கரப்பான் பூச்சிகளுக்குச் சிறந்த உணவாக இருக்கின்றன. அதனால் தேவையற்ற பேதியை வீட்டில் வைத்திருப்பதைத் தடுக்கவும்.

கொஞ்சம் தண்ணீர் இருந்தாலும் கரப்பான் பூச்சியால் உயிர் வாழ முடியும் என்பதால் பாத்திரம் கழுவும் சிங்க் இரவு நேரங்களில் ஈரமாக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம் நிறைந்த கடலை மாவு அடை செய்வது எப்படி?

அதே போல இரவு சாப்பிட்ட பின்னர் மீதம் உள்ள உணவுகளை வைக்காமல் அதை சரியாக மூடி பிரிட்ஜில் வைப்பது கரப்பான் வரவைத் தடுக்கும். மீதம் உள்ள உணவுகளைத் தேடி தான் பெரும்பாலான கரப்பான் பூச்சிகள் வரும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)