ஈசியாக அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?





ஈசியாக அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?

1

பெண்களுக்கு இருக்கும் பல டென்ஷன்களில் என்ன சமைப்பது என்பதே பெரிய கவலை. தினசரி சமைத்து சமைத்து சளித்து போகும் அளவிற்கு உணவு வெரைட்டிகள் தீர்ந்திருக்கும். 

ஈசியாக அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?
என்னதான் செய்வதென்று சமைக்கும் அனைவருக்கும் ஒரு யோசனை ஓடி கொண்டே தான் இருக்கும். அப்படி ஈஸியாகவும், ஹெல்தி யானதாகவும், குழந்தைகளுக்கு பிடித்த உணவான அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த வார்த்தை அதிகமாக கொங்கு மண்டலங்களில் மட்டுமே கேள்வி பட்டிருப்போம். கோவை மக்களே இந்த அரிசி பருப்பு சாதத்தை அதிகமாக சமைப்பார்கள். 

இந்த உணவுக்கு அடிமை யாகாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கமகமக்கும் அரிசி பருப்பு சாதத்துக்கு அடிமை தான்.

தேவையான பொருட்கள் : .

துவரம் பருப்பு - ¼ கப்

சின்ன வெங்காயம் - 15

மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

மிளகு பொடி - 1 சிட்டிகை

பெருங்காயம் - ¼ டீஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

அரிசி - 1 கப்

தக்காளி - 1

பூண்டு - 3

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ஆரோக்கியம் நிறைந்த கடலை மாவு அடை செய்வது எப்படி?

தாளிக்க தேவையானவை

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - ½ டீஸ்பூன்

சீரகம் - ½ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1-2

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை : .

ஈசியாக அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?

அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சிறிது நேரம் ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 

இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டு சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். 

அடுத்ததாக தக்காளி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

ஆரோக்கியம் தரும் கருப்பு உளுந்தங்களி செய்வது எப்படி?

தண்ணீர் நன்கு கொதி வரும் போது ஊற வைத்த அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் மிளகு பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து குக்கரை மூடவும். 

இது ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும். பிரஷர் அடங்கும் வரை குக்கரை திறக்க வேண்டாம். இப்போது நெய் சேர்த்து கிளறவும். 

அரிசி பருப்பு சாதத்தை உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு அல்லது வெண்டைக்காய் வறுவல் உடன் சேர்த்து சாப்பிட்டால் நாக்கில் டேஸ்ட் நடனமாடும்.

Tags:

Post a Comment

1Comments

  1. மதிவாணன்17 February, 2024 17:23

    இது நல்லா இருக்குமா

    ReplyDelete
Post a Comment