கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும்.
கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.
இவை இளம் சிவப்பு நிறம் கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். மேற்புறத்தில் சின்ன சின்ன முள்கள் நிறைந்து இருக்கும் இந்த கத்திரிக்காய் மிகவும் சுவை மிக்கது.
வேலூர் ஸ்பெஷல் இந்த முள்ளு கத்திரிக்காய் கொண்டு துவையல் செய்யலாம். கத்திரிக்காயை விரும்பாதவர்கள் கூட இதன் சுவையில் மயங்கி சாப்பிடுவர்.
உடல்சூடு, செரிமாணம் நீக்கும் முருங்கை கீரை, அருகம்புல் !
தேவையான பொருட்கள் : .
முள்ளு கத்திரிக்காய் 4
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7 அ 8
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
கொத்த மல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
புளி - கொட்டைப் பாக்கு அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க : .
கடுகு - 1 ஸ்பூன்,
உடைத்த உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
பெண்களுக்கான மருத்துவக் குறிப்புகள் தெரிந்து கொள்ளுங்கள் !
செய்முறை : .
அதே போல் வெங்காயம் தக்காளியையும் நறுக்கிக் கொண்டு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி கத்திரிக்காய், தக்காளி இவற்றையும் சேர்த்து வதக்கவும்.
வதக்கியத்தை சிறிது நேரம் ஆற விட்டு தேவையான அளவு உப்பு, கொட்டை பாக்கு அளவு புளி, கொத்தமல்லி இலைகள் சிறிது சேர்த்து விழுதாக அரைக்காமல் சற்று கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இதயத்துக்கான மருத்துவக் குறிப்புகள் தெரிந்து கொள்ளுங்கள் !
இந்த கத்திரிக்காய் துவையல் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். இட்லி, தோசை, அடை, பொங்கல் என அனைத்திற்கும் சிறந்த சைட் டிஷ் ஆகவும் இருக்கும்.