காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய். அதே போல் மிளகாய் என்றால் நமக்கு ஞாபத்திற்கு உடனே வருவது உரப்பு தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை.
குடைமிளகாய் சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும்?
கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும்.
இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
மிளகாயில் அதிக அளவு கால்சியம் உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படும்.
சிலருக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜியாக இருக்கலாம். அதனால் அதை பருகாதவர்கள், அதிக கால்சியம் உள்ள மிளகாயை உண்ணலாம். சரி இனி மிளகாய் கொண்டு தஞ்சாவூர் மோர் மிளகாய் போடுவது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தஞ்சாவூர் குண்டு மிளகாய் - 1 kg
தயிர் - 3/4 லிட்டர்,
வெந்தயம் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி செய்வது எப்படி?
செய்முறை . :
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் மிளகாய், தேவையான உப்பு, கெட்டி மோர், அரைத்த வெந்தயம், சிறிது மஞ்சள் தூள், 2 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்க மோர் மிளகாய் வற்றல் காய்ந்ததும் கறுத்து போகாமல் இருக்கும்.
இரண்டு நாட்கள் மோரில் நன்கு ஊற விடவும். தினம் இரண்டு வேளையும் குலுக்கி விடவும்.
இரண்டு நாட்கள் கழித்து பகலில் நன்கு வெயில் படும் இடத்தில் பிளாஸ்டிக் சீட்டை விரித்து மிளகாயை மட்டும் எடுத்து வெயிலில் காய விடவும். சாயங்காலம் அதே மோரில் போட்டு இரவு முழுவதும் திரும்பவும் ஊற விடவும்.
இப்படி மோர் முழுவதும் வற்றும் வரை காய விட்டு நன்கு மொறுமொறுப்பாக காய்ந்ததும் எடுத்து பத்திரப் படுத்தவும். தேவைப்படும் போது நல்லெண்ணையில் மோர் மிளகாயை பொரித்து தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஜோராக இருக்கும்.
பெண்களின் உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி?
மிளகாயை வாங்கி நன்கு அலம்பி ஈரம் போக காட்டன் துணியில் உலர்த்தி ஈரம் இல்லாத பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். மிளகாயை ஊசியால் நான்கைந்து இடத்தில் குத்தி விட உப்பு , புளிப்பு இறங்கி சுவையாக இருக்கும்.
எல்லா மிளகாயையும் இப்படி ஊசியால் குத்திக் கொள்ளலாம் . கத்தியால் கீறினால் விதைகள் எல்லாம் மோரில் ஊறும் போது வெளியேறி விடும் .எனவே ஊசியால் குத்துவது தான் சிறந்தது.