தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கி யுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு. பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப் படுத்துகிறது.
இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
சரி இனி தக்காளி கொண்டு தக்காளி பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை : .
துவரம் பருப்பு – அரை கப்,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி (நன்கு பழுத்தது) – 4,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க : .
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
சோம்பு – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்.
குண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா?
செய்முறை : .
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை அரை அங்குல வட்டங்களாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.
துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் கொத்துப் பருப்பாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். சற்று வதங்கியதும் தக்காளி, உப்பு சேருங்கள்.
சீயக்காயை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் !
10 நிமிடம் வதங்கியதும், புளிக்கரைசலை அதில் ஊற்றுங்கள். அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதித்ததும் பருப்பையும் சேருங்கள்.
ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். இந்தப் பச்சடி டிபன், சாதம் இரண்டுக்குமே ஏற்ற சூப்பர் ஜோடி.