இணையத்தில் வைரலாகும் புதுமையான உணவு மாம்பழ ஆம்லெட் !





இணையத்தில் வைரலாகும் புதுமையான உணவு மாம்பழ ஆம்லெட் !

0

தற்போது பல விதமான பியூஷன் உணவுகளால் இணையதளம் நிரம்பி வழிகிறது. அதற்கு காரணம் மக்கள் புது விதமான உணவு வகைகளை விரும்பு உண்பது தான். 

இணையத்தில் வைரலாகும் புதுமையான உணவு மாம்பழ ஆம்லெட் !
அதன்படி குஜராத்தில் இருந்து பகிரப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது தான் மாம்பல ஆம்லெட்..

The great indian foodie என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வைரல் மாம்பழ ஆம்லெட் வீடியோவானது 4,057 லைக்ஸ்களையும், ஆயிரக்கணக்கான கருத்துக்களையும் பெற்றுள்ளது. 

பெண்களின் உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி?

பலரும் ஏன் இப்படி மாம்பழத்தை கொலை செய்கிறீர்கள் என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

முதலில் ஒரு பெரிய கல்லில் எண்ணெயை சேர்க்க வேண்டும். அது சூடான பிறகு 2 முட்டைகளை உடைத்து ஆம்லெட் செய்து அதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். 

தொடர்ந்து அதே எண்ணெயில் வேக வைத்த இரண்டு முட்டை, மஞ்சள் கருவை சேர்த்து அதனுடன் 2 முழு சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி இலைகள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த உணவின் முக்கிய பொருளான மாம்பழ ஜூசை சேர்த்து மஞ்சள் கரு க்ரீம் பதத்திற்கு மாறும் வரை கிண்ட வேண்டும். அது ஒரு பதத்திற்கு வந்த பிறகு அப்படியே செய்து வைத்த ஆம்லெட்டில் மேல் வைக்க வேண்டும்.

தொடர்ந்து அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய முட்டையின் வெள்ளைக்கரு, முழு சிவப்பு மிளகாய், மசாலா பொருட்கள், கொத்தமல்லி இலைகளுடன் மற்றொரு இனிப்பு மாம்பழ ஜூசை ஊற்றி அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், உப்பை சேர்த்து நன்கு வறுக்கவும்.

சுவையான தாய் யெல்லோ சிக்கன் கறி செய்வது எப்படி?

இதை முட்டை ஆம்லெட்டின் மேல் மாற்றில் அதன் மேல் துருவிய சீஸ் சேர்த்து பிரட் டோஸ்ட்களை சேர்த்து பரிமாறினால் முட்டை ஆம்லெட் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)