அருமையான உருளைக்கிழங்கு தேங்காய் பால் கிரேவி செய்வது எப்படி?





அருமையான உருளைக்கிழங்கு தேங்காய் பால் கிரேவி செய்வது எப்படி?

0

தேங்காய்ப் பாலில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச் சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. மக்னீசியமும் கொழுப்பு அமிலங்களும் நிறைந்தது.

அருமையான உருளைக்கிழங்கு தேங்காய் பால் கிரேவி செய்வது எப்படி?
அதோடு தேங்காய் மற்றும் தேங்காய்ப் பாலில் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. சமையலில் தேங்காய் வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப் படுவதில்லை. 

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதங்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தேங்காய்ப் பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன.

உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.

கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது. சரி இனி தேங்காய்ப் பால் கொண்டு அருமையான உருளைக்கிழங்கு தேங்காய் பால் கிரேவி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்திக்கு அம்மினி கொழுக்கட்டை செய்வது எப்படி?

தேவையானவை . :

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 8

தக்காளி - 2

உருளைக் கிழங்கு - 2

கறிவேப்பிலை 3 இணுக்கு

வெந்தயம் - ½ டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

எலுமிச்சம் பழம் - 1

கெட்டித் தேங்காய்ப் பால் - 1 கப்

நீர்த்த தேங்காய்ப்பால் - 3 கப்

ஏலக்காய் - 2

முந்திரி - 10

உப்பு - தேவையான அளவு.

தனியாவை பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி?

செய்முறை . :

அருமையான உருளைக்கிழங்கு தேங்காய் பால் கிரேவி செய்வது எப்படி?

உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் நீர்த்த தேங்காய்ப் பாலில் பாதியை ஊற்றி சூடாக்கவும். 

அதில் தக்காளிப் பழங்களை வெட்டிப் போட்டு மிதமான தீயில் வேக விடவும். நன்கு வெந்ததும், உருளைக் கிழங்கை சேர்த்து கரண்டியால் மெதுவா நசுக்கி விடவும்.

பின் அதில் மீதமுள்ள நீர்த்த பாலை ஊற்றவும். கொதித்து வரும் போது அதனுடன் வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை கீறி, ஏலக்காயை நசுக்கி, எலுமிச்சை சாரைப் பிழிந்து சேர்க்கவும். 

மட்டன் ரோகன் ஜோஷ் செய்வது எப்படி?

கூடவே உப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், முந்திரி ஆகிய வற்றையும் போடவும். எல்லா வற்றையும் ஒன்று சேர கலந்து விட்டு இரண்டு நிமிடம் கழித்து கெட்டித் தேங்காய்ப் பாலை ஊற்றவும்.

நுரைத்து, கொதி வரும்போது அடுப்பை அணைக்கவும். இந்த கிரேவி சப்பாத்தி, இடியாப்பத்திற்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்துடன் பிசைந்து உண்ணவும்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)