ரோட்டு கடை ஸ்டைல் முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?





ரோட்டு கடை ஸ்டைல் முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?

0

உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. ரோட்டு கடை ஸ்டைல் முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. 

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது. 

முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும். முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும்.

முட்டை கொத்து பரோட்டா சுவையானது மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய ஒன்று தான் இந்த முட்டை கொத்து பரோட்டா

இதை ரோட்டுக்கடை ஸ்டைலில் முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி? என்று இந்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். 

சமையலறையில இந்த இடங்கள மட்டும் தினமும் சுத்தம் செய்ய மறந்துடாதீங்க…

தேவையானவை : .

பரோட்டா - 5 

முட்டை - 3 

வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 

தக்காளி - 1  

கருவேப்பிலை - தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் - 2 

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி  

மஞ்சள் தூள் - சிறிது 

உப்பு - தேவைக்கேற்ப 

சிக்கன் குழம்பு - தேவைக்கேற்ப 

செய்முறை : .

ரோட்டு கடை ஸ்டைல் முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?

பரோட்டாவை சிறு சிறு துடுகளாக ஒன்றிரண்டாக பிய்த்துக் கொள்ளவும். தக்காளியை நசுக்கிக் கொள்ளவும். 

பிறகு ஒரு இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.  

வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மிளகுத்தூள், சேர்த்து நன்கு வதக்கவும், பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதாகவும். 

படுக்கைக்கு செல்வதற்கு முன் பால் குடிப்பீங்களா? இத படிங்க !
வதக்கிய பொருட்களின் நடுவில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ளவும்.  இறுதியாக சிக்கன்/மட்டன் குழம்பை ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.  

கடைசியாக பிய்த்து வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து கலக்கி இரண்டு இரும்பு கரண்டிகளை வைத்து பரோட்டாவை நன்கு கொத்திக் சூடாக பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)