எண்ணெய், சமைக்கும் முறை, கையாளும் திறன், அலட்சியம், பாத்திரத்தின் திறன் என்று பல காரணங்களால் விபத்துகள், காயங்கள் ஏற்படுகின்றன.
ஆனால் இப்படி வீட்டில் பொறித்து எடுக்கும் போது, சூடு படுவது, எண்ணெய் படுவது, தீக்காயங்கள் ஆவது, அதை தாண்டி உணவு சமமாக சமைக்கப் படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் எழும்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. எண்ணெய், சமைக்கும் முறை, கையாளும் திறன், அலட்சியம், பாத்திரத்தின் திறன் என்று பலது உண்டு. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க நம்மால் முடிந்த சில விஷயங்களை செய்யலாம்.
இது முடிந்தவரை சரியான விபத்தற்ற சீரான சமையலுக்கு உதவியாக இருக்கும்.
கட்டடத்திற்குள் புகுந்து செல்லும் ரயில் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
சிறிய பர்னரைப் பயன்படுத்தவும் : .
ஒரு சிறிய பர்னர் பயன்படுத்தி சமையல் போது சிறந்த வெப்பம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருக்கும். அதே போல தீயில் வேகும் போது, உணவின் உள்பகுதி வரை வேக வழி வகுக்கும்.
உலர்ந்த கடாயை பயன்படுத்துங்கள் : .
இதனால் எண்ணெய் வெடிப்புகள் மற்றும் கசிவுகளைத் தடுக்கப்படும். அதோடு தீக்காயங்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
எண்ணெய் புகை : .
வெற்றிகரமான ஆழமான வறுக்கலுக்கு சரியான வெப்பநிலையை பராமரிப்பது முக்கியம். எண்ணெயை போதுமான அளவு சூடாக்கவும். அதே போல அதிக தீயில் வைத்து அதனால் ஏற்படும் புகையைத் தவிர்க்கவும்.
இதனால் உணவு சீக்கிரம் கருப்பு அல்லது பழுப்பு நிறமாக மாற்றும். ஆனால் உட்புறம் வேகாமல் இருக்கும்.
பொரிப்பதற்கு முன் எண்ணெய் சோதனை செய்யவும் : .
அது போட்டதும் மேலே எழுந்தால் உங்கள் உணவு வறுக்க எண்ணெய் தயாராக இருக்கிறது என்று பொருள். அதன் பின்னர் மிதமான தீவில் வைத்து வறுத்து எடுங்கள்.
குறைந்த தீயில் சமைக்கவும் : .
வறுக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் அதாவது எண்ணையில் ஏதேனும் போடப்போகிறீர்கள் என்றால் தீயை முழுமையாக குறைத்துக் கொள்ளுங்கள்.
யார், யாரெல்லாம் வருமான வரி கட்டுவது கிடையாது?
இந்த அணுகு முறை உங்கள் கையில் எண்ணையில் வெப்பம் படமால் பார்த்துக் கொள்ளும். மேலும் எண்ணி கொதித்து மேலே படாமல் பார்த்துக் கொள்ளும். அதன் பின்னர் தீவை கொஞ்சம் அதிகம் செய்து வேக வைக்கலாம்.