ஆட்டு மூளையை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் !





ஆட்டு மூளையை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் !

1

ஆட்டிறைச்சி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று. ஆட்டின் சதை பகுதிகளை காட்டிலும் அவற்றின் மூளை, ஈரல், குடல் போன்ற உறுப்புக்கள் அதிக சத்துடன், சுவையாகவும் இருக்கும். 

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் !
ஆட்டு மூளையில் புரதம், கொழுப்பு மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது. இவை கண் பாதிப்பு, விந்தணு குறைபாடு, சரும பாதிப்பு ஆகியவை குணமாகும்.
ஸ்டிக் எக்ஸர்சைஸ் சிம்பிளா செய்யலாம் வாங்க ! 

ஆட்டு மூளையின் 10 நன்மைகள்:

ஆட்டு மூளையை தொடர்ந்து உண்டு வந்தோம் என்றால் கண் பாதிப்புகள் நீங்கி அவை குளிர்ச்சியாக இருக்கும். ஆட்டு மூளை புத்தி தெளிவாக்குவதோடு, நினைவாற்றலை பெருக்கும்.

ஆண்கள் ஆட்டு மூளையை தவறாமல் உண்ண வேண்டும். ஆட்டு மூளை விந்தணு குறைபாட்டை சரி செய்து அவற்றை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் இருப்பதால் இவை நம் உடலுக்கு பல நமைகளை கொடுக்கிறது.

ஆட்டு மூளையில் அஸ்கார்பிக் அமிலம், லெசித்தின், செரிப்ரோசைட், ரிபோஃப்ளேவின், நியாசின், தயாமின், புரதம், கொழுப்பு மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது.

இவை மனித மூளைக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வாரி வழங்குகிறது. சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் அதே சமயம் அழகாகவும் வைத்துக் கொள்ள தொடர்ந்து ஆட்டு மூளையை உண்டு வர வேண்டும்.

ஆட்டு மூளையை அடிக்கடி உணவில் எடுத்து கொள்வது கபத்தை நீக்கும். மார்பில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதோடு அவற்றை வலிமையாக வைத்திருக்க ஆட்டு மூளை பெரிதும் உதவுகிறது.

ஆட்டு மூளையில் காணப்படும் பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் செய்து வெளியேற்றும் தன்மை கொண்டது. ஆட்டு மூளை நம் உடலில் தாதுச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

ரூ13 கோடிக்கு மீன் விற்பனை - என்ன மீன் தெரியுமா?

ஆட்டு மூளை வறுவல் செய்யும் முறை : .

முதலில் ஒரு ஸ்பூன் மஞ்சளில் ஆட்டு மூளையை கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து முழு ஆட்டு மூளையை அப்படியே போட்டு மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.

பின்னர் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி விடவும். பிறகு ஒரு தட்டு போட்டு மூட வேண்டும். மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைத்து தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அணைத்து விடவும்.

Tags:

Post a Comment

1Comments

Post a Comment