கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடிய உணவாக இருக்கிறது பாகற்காய்.
அதே சமயம் இதன் நற்பண்புகளுக்காக இதை அடிக்கடி விரும்பி உணவில் சேர்த்து கொள்பவர்களும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறார்கள்.
இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் பாகற்காயை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்கின்றன.
வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய்.
கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
அதே போல பாகற்காயை கூட்டு, பொரியல், குழம்பு, சிப்ஸ் என பல்வேறு வழிகள் மூலம் உணவில் சேர்த்து கொண்டாலும், அதன் ஜுஸை நேரசியாக அருந்துவது பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது.
உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்யக் கூடாததும் !
பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி கீழே காணலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியம் :
ரத்த சர்க்கரையை கட்டுப் படுத்துவதில் பாகற்காய் பெரும்பங்கு வகிப்பது ஆய்வுகள் மூலமும் உறுதிப் படுத்தப்பட்டு உள்ளன.
எனவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க வேண்டிய அவசியம் உள்ள நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் ஜூஸை அருந்துவது மிகவும் நன்மை அளிக்கும்.
கேன்சர் தடுப்பு :
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு ஒவ்வாமை மற்றும் தொற்றிலிருந்து தடுக்கும் குணம் கொண்ட பாகற்காய் முக்கியமாக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பாகற்காய் ஜூஸை சீரான இடைவெளியில் குடித்து வருவது புற்றுநோய் செல்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி கட்டி உருவாவதை நிறுத்துகிறது. மார்பக, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தும் இதன் மூலம் கணிசமாக குறைகிறது.
எந்தெந்த பொருட்களை தேநீருக்கு பிடிக்காது?
எடை இழப்பு:
மேலும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. தவிர இதில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலினுள் இருக்கும் நச்சு தன்மையை குறைக்கின்றன, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
வைரஸ் தடுப்பு பண்புகள் :
சிக்னல் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் மட்டும் இருப்பது ஏன்?
இதய நோய்
பாகற்காயின் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும். புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
முடி பளபளப்பாக :
இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும். பாகற்காயின் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும்.
பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடி கொட்டுவது குறையும். பாகற்காய் கசக்கும் என்று தானே அதனை விலக்கி வைக்கிறார்கள் சிலர்.
மழைக்காலத்தில் துணி துவைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க !
அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனில் தேங்காய் உடைத்ததும் வரும் இளநீரில் சிறிது நேரம் வெட்டிய பாகற்காய் துண்டுகளை ஊற விட வேண்டும்.
அல்லது உப்பு போட்டு ஊற வைக்க வேண்டும். அப்போது அதில் உள்ள கைப்பு சுவை போய் விடும்.