கலாக்காய் ஊட்டச்சத்துக்கள் பற்றியும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம் !





கலாக்காய் ஊட்டச்சத்துக்கள் பற்றியும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம் !

0

கலாக்காய் என்ற இந்த காய் கரோண்டா என்றும் விஞ்ஞான ரீதியாக கரிசா காரண்டாஸ் என்றும் அழைக்கப் படுகிறது, இது அப்போசினேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் புதர் தாவரமாகும்.

கலாக்காய் ஊட்டச்சத்துக்கள் பற்றியும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம் !
மலாயாவில் கெரெண்டா என்ற பெயரிலும், வங்காள திராட்சை வத்தல் அல்லது தென்னிந்தியாவில் கலாக்காய் என்றும், தாய்லாந்தில் நம்டெங், காரம்பா, கராண்டா, கராண்டா மற்றும் பிலிப்பைன்ஸில் பெருங்கிலா போன்ற வெவ்வேறு பெயர்களால் இது அழைக்கப் படுகிறது.

ஒட்டு மொத்த தாவரம்

இந்த கலாக்காய் மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் எல்லாம் நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பார்ப்பதற்கு பெர்ரி வடிவில் சின்னதாக இருந்தாலும் இதன் பயன்பாடு ஏராளம். 

இதை நீங்கள் பழ வடிவிலோ, பொடி வடிவிலோ ஏன் மாத்திரை வடிவில் கூட மார்க்கெட்டில் வாங்கிக் கொள்ளலாம். பழத்தை சாப்பிடுவதற்கு முன் அதன் விதைகளை நீக்கி விட வேண்டும்.

பாதி காயாக இருக்கும் போது இது சாப்பிட சுவையாக இருக்கும். இதன் புளிப்பு மட்டும் அசிடிக் சுவையுடன் லைட்டாக உப்பை தொட்டு சாப்பிட்டால் போதும் நாக்கு சொட்டை போடும். 

நன்றாக பழுத்த பிறகு இனிப்பு சுவை உடையதாக இருக்கும். இந்தியாவில் இந்த கலாக்காயை நிறைய மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். 

மைக்ரோவேவில் எந்த மாதிரியான பாத்திரம் பயன்படுத்தலாம்?

இதன் ஊட்டச்சத்துக்கள் பற்றியும் இதன் நன்மைகள் பற்றியும் இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

கலாக்காய் ஊட்டச்சத்துக்கள் பற்றியும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம் !

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் பெர்ரியில்

0.2 மில்லி கிராம் - மாங்கனீஸ்

0.4 கிராம் - கரையக் கூடிய நார்ச்சத்துகள்

1.6 கிராம் - நார்ச்சத்துகள்

80.17 கிராம் - தண்ணீர்

10.33 மில்லி கிராம் - இரும்புச்சத்து

81.26 மில்லி கிராம் - பொட்டாசியம்

3.26 கிராம் - ஜிங்க்

1.92 மில்லி கிராம் - காப்பர்

51.27மில்லி கிராம் - விட்டமின் சி உள்ளன.

உடல் நல நன்மைகள்

இந்த தம்மா துண்டு கலாக்காய் ஆஸ்துமா நோயிலிருந்து சரும நோய்கள் வரை குணப்படுத்துகிறது.

அடிவயிற்று வலி

கலாக்காய் ஊட்டச்சத்துக்கள் பற்றியும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம் !

இந்த காயில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் அடிவயிற்று வலியை சரி செய்கிறது. உலர வைத்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சீரணமின்மை, வாயு மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

சீரண சக்தியை மேம்படுத்துதல்

இந்த பழத்தில் உள்ள பெக்டின் என்ற சத்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. கரையக் கூடிய நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகப்படுத்தும் மேலும் பசியை ஏற்படுத்தும்.

ஏலத்திற்கு வரும் வீட்டை வாங்கலாமா?

காய்ச்சலை குறைத்தல்

இதில் போதுமான அளவு விட்டமின் சி இருப்பதால் காய்ச்சலின் வீரியத்தை குறைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காய்ச்சலுக்கு எதிரான கிருமிகளை எதிர்த்து போரிடுகிறது. 

10 மில்லி கிராம் அளவு இந்த பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் காய்ச்சல் தானாக குறைந்து விடும்.

மூளைத்திறன் ஆரோக்கியம்

மூளைத்திறன் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள மக்னீசியம் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் ட்ரைப்டோஃபோன் போன்றவை செரோடோனின் சுரப்பிற்கு உதவுகிறது. இதனால் ஒட்டு மொத்த மூளையின் திறனும் அதிகரிக்க்கிறது.

இதய தசைகளின் வலிமை

கலாக்காய் ஊட்டச்சத்துக்கள் பற்றியும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம் !

இந்த கலாக்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். 15-20 மில்லி லிட்டர் ஜூஸ் குடித்து வந்தால் இதய தசைகளின் வலிமை அதிகரித்து விடும்.

எலும்பு வலுவிழப்பு நோய் என்றால் என்ன?

அழற்சிக்கு மருந்து

இந்த கலாக்காயிற்கு இயற்கையாகவே உடலில் உள்ள அழற்சியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட வலிமை உள்ளது.

இது போக அஸ்காரிஸ், ஈறுகளில் இரத்தம் வடிதல், உட்புற உறுப்புகளில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. 

அதீத தாகம் மற்றும் பசியற்ற தன்மை போக்க இது உதவுகிறது. சரும நோய்கள், அரிப்பு, அல்சர் மற்றும் எபிலப்ஸி போன்ற நோய்களுக்கும் மருந்தாகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)