பாமாயில் நன்மை தீமைகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள் !





பாமாயில் நன்மை தீமைகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள் !

0

உண்ணக்கூடிய இந்த வெஜிடபிள் ஆயில், சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மனிதர்களால் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது. எகிப்தில் உள்ள அபிடோஸ் பகுதியில் தான் முதல் முறையாக பாமாயில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 

பாமாயில் நன்மை தீமைகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள் !
இங்கிருந்து தான் பின்னாள்களில் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது. பழத்தின் சதைப் பகுதியிலிருந்து (Pulp) எடுப்பது மற்றும் பழத்தின் கொட்டை யிலிருந்து எடுப்பது எனப் பாமாயிலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 

பழத்தின் சதைப்பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும்.ஒரு பெரிய கொத்தில் இருக்கும் பழங்களின் சதைப்பற்றான பகுதியிலிருந்து தான் (Pulp) பெரும்பாலும் பாமாயில் எடுக்கப்படுகிறது.

100 கிராம் எண்ணெயில் 884 கிலோ கலோரிகள் உள்ளன. வேறு எந்தப் பழத்திலும் கிடைக்காத வைட்டமின் ஈ நிறைந்துள்ள tocotrienols என்ற ரசாயனம் இதில் இருக்கிறது. 

அதுவும், ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெயில் மட்டுமே இந்த வைட்டமின் சத்து நிறைந்திருக்கும். சுத்திகரிக்கப்படாத மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் என 2 வகையான பாமாயில்கள் விற்பனை செய்யப் படுகின்றன.

சுத்திகரிக்கப்படாத பாமாயிலில் இயற்கை நிறம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். மறுபுறம் பாமாயிலை சுத்திகரிக்கும் பொழுது அதில் உள்ள பல நல்ல ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடுகின்றன. 

சாலையோர கடை வீதியில் விற்கப்படும் வடை, பஜ்ஜியில் தொடங்கி நம் வீட்டு சமயலையரை வரை நம்மில் பலரும் சமையலுக்கு பாமாயிலை பயன்படுத்துகிறோம்.

செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !

சமையலை தவிர, பிரட் சாக்லேட் குக்கீஸ் போன்ற ஒரு சில பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் வெண்ணெய்க்கு பதிலாக பாமாயில் பயன்படுத்தப் படுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, பாமாயில் வெண்ணெயை விட ஆரோக்கியமானது என்று தெரியவந்துள்ளது. 

இருப்பினும் பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், பாமாயிலை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பொழுது உடலில் கெட்ட கொழுப்பின் அளவுகள் அதிகரிக்கும். இதனால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

பாமாயிலின் ஊட்டச்சத்து விவரம்

பாமாயில் நன்மை தீமைகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள் !

நன்மை தரும் சத்துக்கள் : .

பாமாயிலில் நிறைவுற்ற மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் கலவைகள் உள்ளன. 

கூடுதலாக, இதில் வைட்டமின்கள், தாதுக்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் A, E போன்ற நன்மை தரும் ஊட்டச் சத்துக்களும் காணப்படுகின்றன. இவை இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியமா?

தீங்கு தரும் சத்துக்கள் : .

பாமாயில் 50% நிறைவுற்ற கொழுப்பால் ஆனது, முக்கியமாக இதில் காணப்படும் பால்மிடிக் அமிலம் எனும் கொழுப்பு வகையால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவுகள் அதிகரிக்கலாம். 

இது இருதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், அனைத்து எண்ணெய் வகைகளை போலவே, பாமாயிலிலும் அதிக அளவு கலோரிகள் உள்ளதால் இதனை அளவோடு பயன்படுத்தினால் பாதிப்புகளை தடுக்கலாம்.

சமையலுக்கு பாமாயில் பயன்படுத்தலாமா?

பாமாயில் நன்மை தீமைகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள் !
பாமாயில் அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது. இது சமையலுக்கு ஏற்றதாக இருந்தாலும், இதை அளவோடு பயன்படுத்துவதே சிறந்தது. 

பாமாயில் பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா என்பதை பயன்படுத்தும் அளவு மற்றும் சமைக்கப்படும் உணவைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும். 

ஆனால் இதை அதிகப்படியாக பயன்படுத்துவதால் கொலஸ்ட்ரால் அல்லது கெட்ட கொழுப்புகளின் அளவுகள் அதிகரிக்க கூடும். 

இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பாமாயிலை சரியான அளவுகளில் பயன்படுத்தவும்.

கலப்படம் : .

பாமாயில் கலப்படத்தை அதன் நிறத்தை வைத்தே கணித்து விடலாம். இதன் சிவப்பு நிறத்துக்குக் காரணம், இதில் இருக்கும் கரோட்டின். ஆனால், இதில் சில ரசாயனங்கள் சேர்த்து வெள்ளை பாமாயிலாக மாற்றும் போது, எண்ணெய் கலப்படமாகிறது.

இந்த ரீஃபைண்டு ஆயில், பிஸ்கட், கேக், பீநட் பட்டர், சிப்ஸ் போன்றவை தயாரிப்பதில் பயன்படுத்தப் படுகிறது. இது, உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும்.

சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி?

உபயோகம் : .

பேக்கரிப் பொருள்கள் தயாரிப்பில் பெரிய பங்கு பாமாயிலுக்கு உண்டு. மீதமிருக்கும் சக்கையை விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்துகிறார்கள்.

2017-ம் ஆண்டு மார்ச் மாதம் Deutsche Welle பத்திரிகை தயாரித்த ஆவணப்படம் ஒன்றில், ஜெர்மன் ஆல்ப்ஸில் உள்ள பால் பண்ணைகளில், கன்றுகளுக்கு உணவளிக்க பாலுக்கு மாற்றாக பாமாயில் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டிருந்தனர்.

பாமாயில் பயன்படுத்துவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள் : .

பாமாயில் நன்மை தீமைகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள் !

சமையலுக்கு பாமாயிலை பயன்படுத்த விரும்பினால் அதை அளவோடு பயன்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு பயன்படுத்தப்படும் பொழுது உங்களுடைய தினசரி உணவு சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

நம் தினசரி கலோரி உட்கொள்ளலில், நிறைவுற்ற கொழுப்புகளின் அளவு 10 சதவீதத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. எனவே இதை சிறிய அளவுகளில் பயன்படுத்துவதை கவனித்து கொள்ளுங்கள்.

மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது?

முடிந்தவரை சுத்திகரிக்கப்படாத பாமாயிலை பயன்படுத்த முயற்சி செய்யலாம். மேலும், தரமான முறையில் உற்பத்தி செய்யப்படும் பாமாயிலை தேர்ந்தெடுத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கலாம்.

பாமாயிலும், மற்ற எண்ணெய்களைப் போலவே நன்மை தீமைகளை கொண்டுள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தமே நஞ்சாகும் எனில், பாமாயில் மட்டும் விதிவிலக்கா என்ன? அளவோடு எடுத்துக் கொண்டால் அச்சம் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)