டைஜெஸ்டிவ் பிஸ்கட் உண்மையாகவே நல்லதா? நிபுணர்கள் சொல்வது?





டைஜெஸ்டிவ் பிஸ்கட் உண்மையாகவே நல்லதா? நிபுணர்கள் சொல்வது?

0

பிஸ்கட்டுகளில் பல வகைகள் உண்டு என்றாலும், நல்ல மொறு மொறுப்பு சுவையுடன் இருக்கும் டைஜெஸ்டிவ் பிஸ்கட் நமது ஸ்நாக்ஸ் தேடலை பூர்த்தி செய்வதாக உள்ளது. 

டைஜெஸ்டிவ் பிஸ்கட் உண்மையாகவே நல்லதா? நிபுணர்கள் சொல்வது?
அதிகமான இனிப்பு சேர்க்கப்பட்ட மற்ற பிஸ்கட்டுகளைக் காட்டிலும் இவை ஆரோக்கியமானவை என்ற பரவலான கருத்து உள்ளது. ஆனால், நாம் விரும்பி உண்ணக் கூடிய இந்த பிஸ்கெட்டுகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன? 

டைஜெஸ்டிவ் பிஸ்கட்டுகளை ஸ்காட்லாந்தில் இரண்டு மருத்துவர்கள் 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கினர். நம்முடைய ஸ்நாக்ஸ் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், செரிமானத்தை மேம்படுத்தும் விதமாகவும் இவை தயாரிக்கப் பட்டன. 

குறிப்பாக முழு கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணெய், வெஜிடபிள் ஆயில் மற்றும் பேக்கிங் சோடா போன்ற அடிப்படையான கலவைகளைக் கொண்டு இவை தயாரிக்கப் பட்டன. 

லேசான இனிப்பு மற்றும் மொறுமொறுப்பு சுவை கொண்ட இந்த பிஸ்கட்டுகள், மற்ற பிஸ்கட்டுகளை ஒப்பிடுகையில் ஆரோக்கியமானவை என்ற எண்ணம் நிலவுகிறது. இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. 

டைஜெஸ்டிவ் பிஸ்கட்டுகளில் கலோரி சத்து சற்று குறைவு தான். நம் குடல் நலனுக்கு அவசியமான நார்ச்சத்து இந்த பிஸ்கட்டுகளில் மிக அதிகம் என்பது இதன் சிறப்பம்சமாகும். 

குறிப்பாக செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் மலக்குடல் நடவடிக்கைகளை சீராக வைத்திருக்க உதவும். 

மலச்சிக்கல் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். இதை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். 

பால் கொடுக்கும் போது கோபப்பட்டால் விஷமாகும் பால் !

மற்ற உணவுகளைப் போலவே டைஜெஸ்டிவ் பிஸ்கட்டுகளிலும் சர்க்கரை சேர்க்கப் படுவதால், இதை அதிகப்படியாக சாப்பிடும் போது கலோரிகள் மிகுதியாக சேரும் என்றும், 

அதன் எதிரொலியாக உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கலோரிகள் மிகுதியாக உள்ள மற்ற உணவுகளுடன் சேர்த்து இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.

டைஜெஸ்டிவ் பிஸ்கட் உண்மையாகவே நல்லதா? நிபுணர்கள் சொல்வது?

பொதுவாக டைஜெஸ்டிவ் பிஸ்கட்டுகளை தனித்து சாப்பிடுவதைக் காட்டிலும், ஊட்டச் சத்துக்கள் மிகுந்த பிற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். 

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த பழங்களுடன் சேர்த்து இதை உட்கொள்ளலாம். முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவு வகைகளுடன் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.

நம் கைகளை வலுவடையச் செய்யும் உடற்பயிற்சி !

மிகுதியான சர்க்கரை சேர்க்கப்பட்ட பிற ஸ்நாக்ஸ் வகைகளை ஒப்பிடும் போது டைஜெஸ்டிவ் பிஸ்கட்டுகள் நல்ல தேர்வு தான். 

இருப்பினும் எந்த பிராண்ட் வாங்குகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம், பசி எடுக்கும் சமயத்தில் இது சிறப்பான உணவாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)