வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். ஹெல்த் இஸ் வெல்த் என்று ஆங்கில பழமொழிக்கு இணங்க ஆரோக்கியமான உடலே உண்மையான செல்வமாகும்.
ஆரோக்கியமான உணவு, தினசரி உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி போன்ற விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நோய்கள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
அப்படி நாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவு தான் முளைகட்டிய ராகி. ராசியை 6-8 மணி நேரங்களுக்கு ஊற வைத்து, பின்பு தண்ணீரை வடித்து விட்டு ராகியை ஒரு வெள்ளை துணியில் கட்டி வைக்க வேண்டும்.
உங்கள் தேவைக்கு ஏற்ப 1-2 நாட்களுக்கு ராசியை முளைகட்ட விடலாம். அவ்வப்போது தண்ணீர் மட்டும் தெளித்தால் போதும். சிறிய ராசியில் இருந்து எட்டிப் பார்க்கும் இந்த அழகிய முளைகளை காண இரு கண்கள் போதாது.
முளைகட்டிய ராகியை இப்படி நீங்களே வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். மனமும் நிறையும் உங்கள் ஆரோக்கியமும் செழித்திடும்!
சுவையும் சத்துக்களும் நிறைந்த முளைகட்டிய ராகியின் ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் படித்தறியலாம்.
கப்ஸா ரெசிபி தயாரிப்பது - அரபி சாப்பாடு செய்முறை !
செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது
இந்நிலையில் நார்ச்சத்து நிறைந்த முளைகட்டிய ராகியை உங்கள் காலை உணவில் சேர்த்து வர, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இதனுடன் அன்றைய நாள் முழுவதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
குறைந்த உடல் செயல்பாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. இது போன்று செயல்பாடுகள் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்றது அல்ல.
இந்நிலையில் இதய தமனிகளில் ஏற்படும் அடுப்பை தடுக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் முளைகட்டிய ராகியை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது தமனிகளில் கொழுப்பு படிவதை தடுத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
வாயு நிரப்பப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம் !
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்
சர்க்கரை நோயாளிகளுக்கு ராகி ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் நிறைந்துள்ள அதிகப்படியான நார்ச்சத்து இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
உடல் எடையை குறைக்க உதவும்
உடல் எடையை குறைக்க சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளும்படி நிபுணர்களும் பரிந்துரை செய்கிறார்கள். எனவே நார்ச்சத்தும் ஊட்டச் சத்துக்களும் நிறைந்த ராகி எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.
இதை காலை உணவில் சேர்த்து வர கொழுப்பை விரைவில் குறைத்து நல்ல ஃபிட்டான உடல் அழகை பெறலாம்.
ஒட்டுத் துணி இல்லாமல் வீடுகளில் திருட கிளம்பிய வினோத பேர்வழி !
இரும்புச்சத்து நிறைந்தது
இதை செய்து வந்தால் இரத்த சோகையை தடுக்கலாம். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் முளைகட்டிய ராகியை வாரத்திற்கு 1-2 முறையாவது சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.