நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று தவறுதலாக பலரும் நம்பிக் கொண்டு உள்ளனர். ஆனால், இது உண்மையல்ல என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இலவங்கப் பட்டைகளுடன் நெய்
இலவங்கப் பட்டையில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் நிறைந்துள்ளன. இது பல நோய்களுக்கு எதிராக செயல்படும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தி, செரிமானத்தை அதிகரிக்கும்.
நெய்யுடன் பயன்படுத்தும் போது இதன் பலன் அதிகரிக்கும். முல் ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் சில இலவங்கப் பட்டையை சேர்த்து, 4 முதல் 5 நிமிடங்கள் சூடாக்கி, தீயை அணைத்து வடிகட்டி பயன்படுத்தவும்.
சேப்பங்கிழங்கு ரகசியம் பற்றி தெரிந்து கொள்வோம் !
மஞ்சளுடன் நெய்
முதலில் கிண்ணத்தில் 1 கப் நெய், 1 தேக்கரண்டி மஞ்சள், 1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து காற்று புகாத டப்பாவில் சேமித்து யன்படுத்தவும்.
துளசியுடன் நெய்
துளசி ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இது பார்வையை மேம்படுத்தும். ஒரு பானையில் நெய்யுடன் சிறிது துளசி இலைகளைச் சேர்த்துப் பயன்படுத்தவும்.