காரமான உணவுகளை சாப்பிடும் நபரா? விளைவுகள் என்ன?





காரமான உணவுகளை சாப்பிடும் நபரா? விளைவுகள் என்ன?

0

காரமான உணவுகளில் கேப்சைசின் ஒரு கெமிக்கல் பொருளாகும். இதில் எந்தவித கலோரிகளும் நார்ச்சத்துக்களும் இல்லை. இது நம்முடைய மெட்டபாலிசத்தை தூண்ட உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

காரமான உணவுகளை சாப்பிடும் நபரா? விளைவுகள் என்ன?
காரசாரமான உணவுகள் கொழுப்பை எரிக்க உதவுகிறது. பொதுவாக காரசாரமான உணவை உட்கொள்ளும் போது நம் உடலில் ஒருவித சூடு தெரியும். 

இப்படி உடல் வெப்பநிலை அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா. மிளகாய், கேப்சிகம் மற்றும் மிளகு போன்ற காரசாரமான உணவுகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. 

50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் பெண்?

30 % ஊட்டச்சத்துக்கள் இவற்றில் உள்ளன. காரமான உணவுகளை அளவோடு சாப்பிட்டால் இந்த நல்ல மாற்றங்கள் நடக்கும்? 

ஆனால் காரமான உணவுகளை தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

அறுசுவைகள் என்று அழைக்கப்படும் இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவற்றில் கார்ப்பு என்று அழைக்கப்படும் காரம் சுவை நமது உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

இந்த காரச் சுவை கொண்ட உணவுகளை அதிகமான நபர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதை அதிகமாக சாப்பிடும் பொழுது என்ன நடக்கும் என்பது பற்றி தெரியாமல் நாம் உண்டு வருகிறோம்.

உலக அளவில் காரத்திற்காக சிவப்பு மிளகாய் அதிகளவில் பயன்படுத்தப் படுகின்றது. சிவப்பு மிளகாயை விட சிவப்பு மிளகாய் பொடியை அதிகளவு பயன்படுத்தும் பொழுது உடலுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கின்றது. 

அதிக காரம் நிறைந்த உணவு பொருளை சாப்பிடும் பொழுது அப்பொழுதே வயிற்று எரிச்சல், வாய் எரிச்சல் ஆகியவை ஏற்படும். 

ஆனால் நாளடைவில் காரமான உணவுகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. அந்த பிரச்சனைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

அதிக காரமான உணவை சாப்பிடும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் : .

நாம் தொடர்ந்து அதிகமாக காரச்சுவை உள்ள உணவு வகைகளை சாப்பிடும் பொழுது நம் வயிற்றில் எரிச்சல் உண்டாகும். நாம் தொடர்ந்து காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றது.

இந்த காரம் அதிகம் உள்ள உணவுகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு செரிமான பிரச்சனையும் ஏற்படுகின்றது.

ரயிலில் ஏசி பெட்டிகள் நடுவில் இருப்பது ஏன்? தெரியுமா?

நாம் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது மற்ற உணவுகளில் இருக்கின்ற ஊட்டச் சத்துக்களை இது அழிக்கின்றது. அதனால் நம் உடலுக்கு உணவுகளில் இருந்து கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றது.

காரமான உணவுகளை சாப்பிடும் நபரா? விளைவுகள் என்ன?

தொடர்ந்து நாம் அதிக காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றது.

இந்த காரம் நிறைந்த உணவுகள் நமக்கு ஏற்படும் வாய்ப் புண்களுக்கு காரணமாகின்றது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் அதிகம் காரம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

கோட் பாக்கெட்டில் மிகச்சிறிய துணி வைக்கப்படுவது ஏன்?

நாம் தொடர்ந்து அதிகம் காரம் உள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது நமது உடலில் உள்ள நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றது.

கர்ப்பிணிப் பெண்கள் அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது பிரசவத்தின் முன் கூட்டிய அபாயம் ஏற்படும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)