அழகு தரும் நெல்லிக்காய் தண்ணீர்... குடித்து பாருங்க !





அழகு தரும் நெல்லிக்காய் தண்ணீர்... குடித்து பாருங்க !

0

நம் ஊரில் கிடைக்கக் கூடிய விலை மலிவான பொக்கிஷம் நெல்லிக்காய். அதிக செலவு செய்து வெளி நாட்டில் விளையக்கூடிய பழங்களை சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை.

அழகு தரும் நெல்லிக்காய் தண்ணீர்... குடித்து பாருங்க !
குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய நம் நாட்டு பழங்களில் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிக அளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இந்த பட்டியலில் கண்டிப்பாக நெல்லிக்காயை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.

நெல்லிக்காயில் வைட்டமின் C உட்பட ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சட்னி, ஜூஸ், ஊறுகாய் என பலவிதமாக சாப்பிட்டு இருப்பீர்கள். 

ஆனால் எளிமையான முறையில் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ள விரும்பினால் இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள நெல்லிக்காய் தண்ணீரை கட்டாயமாக முயற்சி செய்து பாருங்கள். 

இதை சுலபமாக வீட்டிலேயே செய்திடலாம். நெல்லிக்காய் தண்ணீரின் செய்முறை மற்றும் அதன் நன்மைகளை இப்போது காணலாம்.

உருளைக்கிழங்கு முட்டை கறி செய்வது எப்படி?

நெல்லிக்காய் தண்ணீர் செய்வது எப்படி?

அழகு தரும் நெல்லிக்காய் தண்ணீர்... குடித்து பாருங்க !
முதலில் நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்த பின் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இந்த நீர் செய்வதற்கு விதைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. விதைகளை நீக்கிவிடலாம்.

நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை ஒரு சில நாட்களுக்கு வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். அவை நன்கு உலர்ந்த பிறகு ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.

இந்த நெல்லிக்காய் பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய் தண்ணீர் குடிக்கும் முறை

ஒரு கிளாஸ் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து கலந்து குடிக்கலாம். நீங்கள் விரும்பினால் இதை வடிகட்டியும் குடிக்கலாம், ஆனால் வடிகட்டாமல் குடிப்பதே சிறந்தது. 

இந்த நெல்லிக்காய் தண்ணீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் பின்வரும் நன்மைகளை பெறலாம்.

ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல் செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்க உதவும்

நெல்லிக்காயில் நிறைந்துள்ள அமினோ அமிலங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன. இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை நீக்கலாம். 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காய் தண்ணீரை உணவுக்கு முன் குடிப்பது நன்மை தரும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

அழகு தரும் நெல்லிக்காய் தண்ணீர்... குடித்து பாருங்க !

நெல்லிக்காயில் உள்ள குரோமியம் எனும் சத்துக்கள் இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை தருகின்றன. 

நெல்லிக்காய் தண்ணீர் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் இதை தங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.

நல்ல செரிமானத்திற்கு உதவும்

நெல்லிக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறை மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்தும். நெல்லிக்காய் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் உள்ள தீங்கு விளைவிக்க கூடிய நச்சுக்களை அகற்றலாம். 

இது மலக்குடல் எரிச்சல் நோய், மலச்சிக்கல் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.

சளி மற்றும் இருமலுக்கு நல்லது

அழகு தரும் நெல்லிக்காய் தண்ணீர்... குடித்து பாருங்க !

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி வைரல் பண்புகள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. 

நெல்லிக்காய் தண்ணீருடன் சிறிதளவு தேன் மற்றும் இஞ்சி சேர்த்து எடுத்துக் கொண்டால் சளி, தொண்டை வலி போன்ற சுவாசப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பல் வலி வராமல் இருக்கனுமா அப்ப இதை சாப்பிடுங்க !

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது

நெல்லிக்காய் தண்ணீர் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல அதிசய நன்மைகளைத் தரும். 

இதை தினமும் காலையில் குடித்து வர பருக்கள், கருந்திட்டுக்கள், வயது முதிர்வின் அறிகுறிகள் போன்ற சருமம் சார்ந்த பல பிரச்சனைகளை தடுக்கலாம். நெல்லிக்காய் தண்ணீர் முகத்திற்கு இயற்கையான பொலிவை கொடுக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)