பாகற்காய் பலரால் வெறுக்கப்படும் காய்கறிகளில் ஒன்றாகும், ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கை கால்கள்ல வர்ற எரிச்சலுக்கு பாகல் இலைகளை அரைச்சு உள்ளங்கை உள்ளங்கால்கள்ல தேய்ச்சா எரிச்சல் நீங்கும். பாகற்காய் விதைகள் கிருமி நாசினியா செயல்படுது.
கல்லீரல் ஆரோக்கியத்துக்காக பாகல்பழங்கள சாப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும். உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது.
மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
நாகர்கோவில் வெறும் குழம்பு செய்வது எப்படி?
இந்த பதிவில் சுவையான கேரளா பாகற்காய் உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பாகற்காய் - 250 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள் தூள் - டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தனியாத் தூள் - 1 டேபிள் டேபிள்
சோம்பு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தாளிக்க : .
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டேபிள் ஸ்பூன்
உளுந்த பருப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
காபி தூளிலும் பளிச் என மின்னும் முகம்... காபி ஃபேஸ் பேக் !
செய்முறை : .
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து பருப்பு சேர்த்து பொரிந்ததும், மஞ்சள், உப்பில் ஊற வைத்துள்ள பாகற்காயை நன்கு பிழிந்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
பாகற்காயை மஞ்சள், உப்பில் ஊற வைத்து பின்னர் பிழிந்து சேர்ப்பதால் அதில் உள்ள கசப்பு சுவையானது குறைந்து விடும். பின்னர் வேக வைத்துள்ள உருளைக் கிழங்கினை சேர்க்கவும்.
சுவையான பீட்ரூட் லோனி ஸ்பாஞ்ச் தோசை செய்வது எப்படி?
அதனுடன் மிளகாய் தூள், தனியாத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி, ஒரு கலக்கு கலக்கி இறக்கினால் பாகற்காய், உருளைக் கிழங்கு வதக்கல் கலக்கலாக சுவைக்கலாம்.
இந்த வதக்கல் சாதம், சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.