அரேபிய உணவு தபூளி செய்வது எப்படி?





அரேபிய உணவு தபூளி செய்வது எப்படி?

0

ஆலிவ் எண்ணெய்யில் ஆரோக்கியமான மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. 

அரேபிய உணவு தபூளி செய்வது எப்படி?

இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. ஆலிவ் எண்ணெய் - குறிப்பாக எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். 

ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. 

அப்படி என்ன தான் இருக்கிறது நிலவில்? மனிதன் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?

எனவே தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும். 

அதன் நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் தவிர, மிதமான அளவில் வைட்டமின்கள் இ, வைட்டமின் கே உள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்கும். 

அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதோடு, ரத்தக் கொழுப்பை ஆக்சிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. 

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்யில் உள்ள முக்கிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த நோய்களுக்கு எதிராகப் போராடுகிறது.

தேவையான பொருட்கள் : .

மல்லி இலை அல்லது பார்ஸ்லி இலை – 100 கிராம்

பல்கர் – 25 கிராம் (சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கிறது)

தோல் உரித்த தக்காளி – 2

நறுக்கிய வெங்காயம் – 2

ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி

தேசிக்காய் சாறு

உப்பு – சுவைக்கேற்ப 

செய்முறை : .

பார்ஸ்லி இலைகளை முதலில் நறுக்கவும். பல்கேர்ரை ஒரு மணி நேரம் ஊற விடவும். தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

இப்போது இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எழுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். பரிமாறுவதற்கு முன், ஒலிவ் எண்ணெய் போட்டு கிளறவும்.

பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் செய்வது எப்படி? 

குறிப்பு : .

இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி நல்ல கொழுப்பை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. ஜீரணத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)