தேங்காயில் உள்ள கொழுப்பு சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ள வர்களுக்கு மருந்தாகப் பயன்படும்.
இவை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். தேங்காயில் இருக்கும் நீர்ச்சத்து உங்கள் உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்கிறது.
அதைத் தவிர்த்து சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைகிறது. நாம் பிள்ளையாருக்கு படைக்கும் தேங்காய் மோதகம் விசேஷ காலங்களில் மட்டும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாலை வேலைகளில் பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு வேலைகளில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் உடலுக்கும் சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இதை எளிமையாக வேகமாக செய்து விடலாம். அதே நேரம் சாப்பிடுவதற்கும் சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
அதனால் இன்று இந்த தேங்காய் மோதகம் செய்வது எப்படி? என்று இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
கோதுமை மாவு - 2 கப்
மைதா மாவு - 1/2 கப்
நாட்டு சக்கரை அல்லது வெல்லம் - 1 கப்
துருவிய தேங்காய் பொடி - 1 கப்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1 Tsp
தண்ணீர் - தேவையான அளவு
யாரெல்லாம் நெய் சாப்பிடலாம்? தினமும் நெய் சாப்பிடுவது நல்லதா?
செய்முறை : .
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லம், ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் மிகவும் கசப்பான உண்மை?
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக சப்பாத்தி தேய்பதில் தேய்த்து, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து மூட வேண்டும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது சூப்பரான தேங்காய் மோதகம் தயார்.