உணவுக் கட்டுப்பாட்டில் உள்ள சிலருக்கு பாலில் உள்ள லாக்டோஜன் எனும் அமிலத்தினால் ஒரு வித ஒவ்வாமை ஏற்படும்.
அப்படிப் பட்டவர்களுக்கான ஒரு பதிவு தான் இது. நம் வீட்டிலேயே வேர்க்கடலை, வினிகர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பாலே இல்லாமல் பன்னீரை செய்யும் முறையை பற்றி பார்க்கப் போகிறோம்.
இதை சிற்றுண்டியாகவும் அல்லது வேறு பல உணவுகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
அழகை பாதுகாக்க நடிகர்கள் செய்யும் ஆபத்தான, அருவருப்பான சிகிச்சைகள் !
வேர்க்கடலையை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்:
ஒரு கிண்ணத்தில் இரண்டு கப் அளவுக்கு வேர்க்கடலை எடுத்துக் கொண்டு நன்றாக கழுவவும். அந்த கிண்ணம் முழுவதும் சூடான தண்ணீரை நிரப்பி கழுவிய வேர்க்கடலைகளை அதில் போட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பிறகு அந்த வேர்க்கடலையை எடுத்து நன்றாக உலர்த்தி அதனுடன் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கெட்டியான பசை போன்ற நிலைக்கு வரும் வரை நன்றாக கலக்கவும். வேர்க்கடலைகள் நன்றாக பொடியாக அரைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
வேர்க்கடலையில் இருந்து பாலை தயார் செய்யவும்:
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அந்த வேர்க்கடலை கலவையானது தண்ணீருடன் நன்றாக கரையும் படி கலக்க வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை நன்றாக கலக்கிய பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.
இப்போது ஒரு துணியை எடுத்துக் கொண்டு அந்த கலவையை அந்த துணியில் இட்டு அதன் அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்றாக பிழிய வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது அந்த வேர்க்கடலையில் உள்ள பாலானது துணி வழியாக வடிகட்டப்பட்ட அந்த பாத்திரத்தில் சேமிக்கப்படும்.
இவ்வாறு இரண்டிலிருந்து மூன்று முறை நன்றாக பிழிந்து வடிகட்டிய பின்னர் துணியில் அரைத்த வேர்க்கடலை மட்டும் கசடாக தேங்கி நிற்கும். அதனை நாம் கடலை மிட்டாயோ அல்லது வேர்கடலை அல்வாவோ செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாரத்தில் எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது?
பாலை திரிய வைத்தல் :
அடுப்பில் உள்ள பாலானது கொதி நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது அரை டேபிள் ஸ்பூன் அளவு நீர்த்த வினிகரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அவ்வாறு செய்து கொண்டிருக்க பால் ஆனது திரிந்து தயிர் போல வரும் போது மீதமுள்ள வினிகரையும் பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் உள்ள ஏடு போன்ற அமைப்பு தண்ணீரில் இருந்து பிரிந்து வரும் வரை நன்றாக கலக்க வைக்கின்றோம்.
வடிகட்டுதல் :
அந்த ஏட்டினை வினிகர் கலவையில் நீண்ட நேரம் வைத்திருக்காமல் விரைவிலேயே அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வடிகட்டுவதற்கு ஏற்ற வகையில் ஒரு பெரிய பாத்திரம் மற்றும் அதன் மீது வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் துணியை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அந்த ஏடு போன்ற கரைசலை அதனுடன் மீது செலுத்தி, வடிகட்டி தண்ணீரை முழுவதுமாக அதில் இருந்து பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அதில் உள்ள வினிகரின் வாசனையை நீக்குவதற்கு 2-3 கப் வரை தண்ணீர் சேர்த்து கலக்கும் போது வினிகரின் வாசனை நீங்கி விடும்.
திடீர்னு மரணம் வருவது எதனால்? அதை எப்படி தவிர்ப்பது?
பன்னீரை கெட்டிப் படுத்துதல்:
இப்போது அந்தப் பன்னீரை வடிகட்டும் துணி நூல் வைத்து நன்றாக பிழிய வேண்டும். அதில் உள்ள நீர் முழுவதும் வெளியேறும் வரை பிழிந்த பிறகு அதை ஒரு மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விட வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் வைத்தால் பன்னீர் மிகவும் காய்ந்தது போன்று ஆகி விடும்.
வீட்டிலேயே செய்த சுவையான பன்னீர் தயார் :
உபயோகப் படுத்தியது போக மீதம் உள்ள பன்னீரை ஒரு கிண்ணம் முழுவதும் தண்ணீரை நிரப்பி அதனுள் அந்த பன்னீரை வைத்து ஃப்ரிட்ஜ்- ல் வைத்து இரண்டு நாள் வரை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.