புதுமையாக புளிப்பு மாங்காய் சட்னி செய்வது எப்படி?





புதுமையாக புளிப்பு மாங்காய் சட்னி செய்வது எப்படி?

0

மாங்காய், மாம்பழம் பலருக்கு பிடிக்கும். கோடை காலங்களில் நிறைய கிடைக்கும். சிலருக்கு மாங்காயின் பெயரைக் கேட்டாலே வாயில் நீர் வரும். 

புதுமையாக புளிப்பு மாங்காய் சட்னி செய்வது எப்படி?
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாங்காய் கோடை காலத்தில் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, சோடியம், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் என பல சத்துக்களைக் கொண்டது மாம்பழம், உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும், மேலும் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மாங்காயின் அமிலேஸ் எனப்படும் செரிமான நொதிகள் உள்ளன, அவை பெரிய உணவு மூலக்கூறுகளை உடைக்க உதவுகின்றன. இதனால் செரிமானம் எளிதாகும். 

மாங்காயில் உள்ள சத்துக்கள் உடலின் நச்சுத் தன்மையை போக்க உதவுகிறது. கூடுதலாக, இது கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மாங்காய் கொண்டு பலவித ரெசிபிகள் செய்யலாம். மாங்காய் சாதம், மாங்காய் ஊறுகாய் எனப் பலவற்றை செய்து சாப்பிடலாம். இப்போது புதுமையாக, எளிதாக மாங்காய் சட்னி கூட செய்யலாம். 

எப்போதும் செய்யும் தேங்காய் சட்னி போல் இதுவும் ஈஸியாக செய்யலாம். புளிப்பு மாங்காய் சட்னி சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வாந்தி போன்ற உபாதைகள் வருவது குறையும் எனக் கூறுகின்றனர்.

ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !

தேவையான பொருட்கள் : .

துருவிய தேங்காய் – 1 கப்

மாங்காய் – 4 துண்டுகள்

இஞ்சி- சிறிய துண்டு

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் – 1

கடுகு – 1/4 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை : .

புதுமையாக புளிப்பு மாங்காய் சட்னி செய்வது எப்படி?

முதலில் மாங்காயை எடுத்து நன்றாக கழுவி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது, மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மாங்காய், தேங்காய், உப்பு எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை மிக்ஸியில் இருந்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்க வேண்டும். 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

இப்போது, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அதை சட்னியில் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் புளிப்பு மாங்காய் சட்னி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)