உலக மக்கள் அதிகமானோர் விரும்பி உண்ணக்கூடிய உணவாக ஐஸ்கிரீம் இருக்கிறது. எனவே உலகின் பல்வேறு இடங்களில், பல வகைகளில், பல நிறங்களில் அதிக ருசியுடன் தயாரிக்கப் படுகிறது.
மணலி கீரையின் மருத்துவப் பயன்கள் !
அப்படி இந்த ஐஸ்கிரீமில் என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம். ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
இந்த ஐஸ்கிரீம்கள் காலத்திற்கேற்ப பல்வேறு சுவைகளில் வருகின்றன. இலைகளில் கொடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் முதல் கண்ணாடி கப்புகளில் கொடுக்கப்படும் ஐஸ்கிரீம்கள் வரை பலர் தங்கள் வயது மூப்பு அடிப்படையில் பார்த்திருப்பர்.
ஐஸ்கிரீமிற் கென்றே தனி பார்லர்கள் திறக்கப்பட்டு அதில் 50-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த நிலையில் துபாயில் ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ 60000 என சொல்லப் படுகிறது.
தங்கத்திற்கு இணையாக விற்கப்படும் இந்த ஐஸ்கிரீமில் அப்படி என்னதான் இருக்கிறது என்றால், தங்க இழைகள் இருக்கின்றனவாம்.
துபாயில் ஸ்கூபி கபே எனும் ஹோட்டலில் 23 காரட் தங்க இழைகள் கொண்டு இந்த ஐஸ்கிரீம் பரிமாறப் படுகிறது.
மடகாஸ்கர் வெண்ணிலா, இத்தாலியன் பிளாக் டிரபிள்ஸ் எனப்படும் அரியவகை பொருட்கள் மூலம் இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப் படுகிறது.
மேலும் இதில் ஈரான் நாட்டு குங்குமப்பூவும் 23 காரட் தங்க இழைகள் சேர்ப்பதும் கூடுதல் சுவையை அளிக்கிறதாம்.
கொழுப்பு நல்லதா? கெட்டதா? உண்மைகளும் கட்டுக்கதையும் !
60 ஆயிரம் கொடுத்து வாங்கும் ஐஸ்கிரீமை வெறும் குச்சியாலோ எவர்சில்வர் ஸ்பூனினாலோ சாப்பிட்டால் சரியாக இருக்காது. இதனால் அந்த தங்க ஐஸ்கிரீமை சாப்பிட வெள்ளி ஸ்பூன் வழங்கப் படுகிறது.
பணத்தால் வாங்க முடியாதது ஏதாவது இருக்கிறதா, 60 ஆயிரம் ரூபாய்க்கு ஐஸ்கிரீம், தங்கத்தை சாப்பிடுவது துபாயில் தான் கிடைக்கும் என நடிகை தெரிவித்துள்ளார்.
கார்களில் வைப்பர்களை தூக்கி வைத்திருப்பது ஏன்?
மேலும் இந்த ஐஸ்கிரீம் உலகில் விலைமதிப்பான ஐஸ்கிரீம் என சொல்லப் பட்டாலும் கின்னஸ் உலக சாதனையை பொருத்தவரை நியூயார்க் நகரில் உள்ள ஃப்ரோசன் ஹாட் சாக்லேட் என்ற ஐஸ்கிரீம் தான் மிகவும் விலை மதிப்பானதாம்.
இதன் விலை 18 லட்சமாம். அம்மாடியோவ்!.. 18 லட்சம் இருந்தால் என்னலாம் வாங்கலாம்?