இன்றைய வாழ்க்கை சூழலில் ஆண், பெண் இருவருக்கும் அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகிறது. முடி உதிர்வு அதிகரிக்கும் பொழுது பெண்களுக்கு உச்சந்தலையை சுற்றியுள்ள பகுதிகளில் முடி குறைவாகவும், ஆண்களுக்கு வழுக்கையும் ஏற்படலாம்.
முடி உதிர்வதற்கான வீட்டு வைத்தியத்தை ஊட்டச்சத்து நிபுணரான ருஜூதா திவாகர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நிபுணரின் பதிவில், வழுக்கை தலை உடைய ஒரு நபர் தன்னுடைய தங்கையின் அறிவுரைப்படி ஒரு வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வந்துள்ளார். அவருக்கு முடி உதிர்வு குறைந்து, புதிதாக முடி வளர தொடங்கி யுள்ளது.
தன் தங்கையின் வீட்டு வைத்தியத்தை பின்பற்றிய அவர் தன்னுடைய இழந்த முடியை மீண்டும் பெற்றுள்ளார். வழுக்கை தலையில் முடி வளர்ந்த அந்த அதிசய புகைப்படத்தையும் நிபுணர் பதிவு செய்திருந்தார்.
அந்த நபர் பின்பற்றிய வீட்டு வைத்தியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவை தொடர்ந்து படியுங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் மற்றும் குறிப்புகளை கவனமாக பின்பற்றவும்.
எப்போது நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது? தெரியுமா?
முடி உதிர்வுக்கு சாலியா விதைகள் : .
சாலியா விதைகளில் உள்ள பண்புகள் முடி உதிர்வை குறைக்க உதவுகின்றன. முடி உதிர்வை எதிர்கொள்பவர்கள் பின்வரும் முறையில் சாலியா விதைகளை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சாலியா விதையின் மற்ற நன்மைகள் : .
இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதில் சக்தி வாய்ந்த பூஞ்சை எதற்கு பண்புகள் நிறைந்துள்ளன.
உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவுகளை அதிகரிக்கிறது.
சாலியா விதைகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும். இதில் உள்ள பண்புகள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சாலியா விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இதை சிறிய அளவுகளில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 5-10 விதைகளுக்கு மேல் எடுத்துக் கொள்ள கூடாது.
உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் சாலியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அன்னாசிப்பூ பக்கவிளைவுகள் என்ன? யாரெல்லாம் தவிர்க்கணும்?
சாலியா விதை சாப்பிடும் முறை : .
முடி உதிர்வால் அவதிப்படும் ஆண், பெண் இருவரும் இந்த குறிப்பை பின்பற்றலாம். இதை பாலுடன் சேர்த்து குடிக்க விருப்ப மில்லாதவர்கள் சாலியா விதைகளை கொண்டு லட்டு தயார் செய்து சாப்பிடலாம்.
பூனைகள் பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்ய உண்மைகள் !
சாலியா விதைகளுடன் கொப்பரை தேங்காய், நெய் மற்றும் வெல்லம் சேர்த்து லட்டு தயார் செய்து சாப்பிடலாம்.
சாலியா விதைகள் பார்ப்பதற்கு ஆளி விதைகளை போல தோன்றினாலும். இவை இரண்டும் வேறு வேறு வேறு என்பதை இங்கு தெளிவு படுத்துகிறோம்.